ஜியோமி எம்.ஐ மேகஸ் 2 இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு எம்.ஐ மேக்ஸ் மற்றும் எம்.ஐ மேக்ஸ் பிரைம் போன்ற ஸ்மார்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த நிலையில், எம்.ஐ மேக்ஸ் 2 தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.16.999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
6.44 இன்ச் டிஸ்ப்ளே, 4 ஜி.பி ரேம் மற்றும் 64 ஜி.பி ஸ்டோரேஜ் போன்ற சிறப்ம்சங்கள் கொண்ட இந்த எம்.ஐ மேக்ஸ் 2 விற்பனைக்கு வரும் போது என்னென்ன ஆஃபர்கள் வழங்கப்படுகிறது? அதோடு எம்.ஐ மேக்ஸ் 2-வின் கூடுதல் விபரங்களை அறிந்து கொள்ளுவோம் வாருங்கள்.
விற்பனைக்கு வருவது எப்போது?
ஜூலை 27-ம் தேதி முதல் எம்.ஐ மேக்ஸ் 2 விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அதற்கு முன்னதாகவே இந்த ஃபோனை வாங்க விரும்ப வேண்டும் என நினைப்பவர்களுக்கும் சிறப்பு ஏற்பாடு உள்ளது. ஆம், எம்.ஐ நிறுவனம் தனது 3-வது ஆண்டின் அடியெடுத்து வைக்கும் விழாவை கொண்டாடும் வகையில் சிறப்பு விற்பனையை அறிவித்திருக்கிறது. அதன்படி, 20 மற்றும் 21-ம் தேதி நடைபெறும் சிறப்பு விற்பனையில், Mi.com என்ற இணையதளத்திலும், பெங்களூர் வொயிட்ஃபீல்டில் உள்ள எம்.ஐ முதன்மை ஸ்டோரிலும், எ எம்.ஐ மேக்ஸ் 2-வை வாங்கிக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mi.com-என்ற இணைதளத்தில் வாங்கும் போது, ஹோட்டல் புக்கிங் செய்யும் வகையில் ரூ.2000 மதிப்பிலான Goibibo வவுச்சர் வழங்கப்படும். மேலும், எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. அந்த சலுகையில், எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8000 பணபரிவர்த்தனை செய்யும்போது, அவர்களுக்கு ரூ.500 கேஷ்பேக் கிடைக்கும் என ஜியோமி தெரிவித்துள்ளது.
ஜூலை 20, 21-ம் தேதி விற்பனையையடுத்து, எம்.ஐ மேக்ஸ் 2, ஜூலை 27-ம் தேதியே வாங்க முடியும். எம்.ஐ நிறுவனமானது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டிலும் எம்.ஐ மேக்ஸ் 2- ஃபோனை விற்பனைக்கு கொண்டு வருகிறது. அதன்படி, இணையதளம் மூலமாக Mi.com, Mi Home, Amazon.in, Flipkart, Tata Cliq, and Paytm Mall விற்பனைக்கு வருகிறது.
இதேபோல, ஆஃப்லைனில், பூர்விகாக, சங்கீதா, விஜய் சேல்ஸ், BigC, Lot Mobiles, Ezone, Hotspot மற்றும் ஜியோமி ரீடெய்லர்ஸ் என பல்வேறு ஸ்டோர்களில் விற்பனைக்கு வருகிறது.
ரிலையன்ஸ் ஜியோவின் 100 ஜிபி டேட்டா
எம்.ஐ மேக்ஸ் 2 வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 100 ஜி.பி டேட்டாவை ஜியோ வழங்குகிறது. ரூ.309 அல்லது அதற்கு மேல் ரீசார்ச் செய்துள்ள வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை பெற முடியும். மேலும், குறிப்பிடும்படியாக, ரெட்மி நோட் 4. ரெட்மி 4, ரெட்மி 4ஏ போன்ற ஸ்மார்ட்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ 30-ஜி.பி எக்ஸ்ட்ரா டேட்டாவை வழங்குகிறது.
ஜியோமி எம்.ஐ மேக்ஸ் 2 -பேட்டரி திறன்
ஜியோமி எம்.ஐ மேக்ஸ் 2, 5300mAh திறன் கொண்ட பேட்டரி திறனுடன் வெளிவருகிறது. அதன்படி, 68 சதவீத சார்ச் செய்தாலே, ஒரு நாள் முழுவதும் சார்ஜ் நிற்கும் திறன் கொண்டது இந்த எம்.ஐ மேக்ஸ் 2 என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், 68 சதவீத சார்ஜ் நிறப்ப, சுமார் ஒரு மணி நேரம் போதுமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கையில் 57 மணி நேர டாக்டைம்.
ஜியோமி எம்.ஐ மேக்ஸ் 2 -கேமரா
முன்னதாக வெளியான எம்.ஐ மேக்ஸ் ஸ்மார்ட்ஃபோனில் 16 எம்.பி கேமரா கொடுக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் பார்க்கும்போது தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள எம்.ஐ மேக்ஸ் 2-ல் 12 எம்.பி கேமராவே கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிடும்படியாக எம்.ஐ மேக்ஸ் 2, மேட் ப்ளாக் என்ற ஒரே ஒரு கலரில் தான் வெளிவரவுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.