"சியோமி ரெட்மி நோட் 4" தீப்பிடித்து எரிந்ததா? இணையத்தில் வெளியான வீடியோ குறித்து சியோமி விளக்கம்

சீன நிறுவனமான சியோமி, இந்தியாவின் முன்னணி மொபைல் போன் தாயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் வீடியோ வெளியானது.

சியோமி ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனில், சிம் போடும் போது திடீரென் தீ பிடித்து எரிந்தது போல வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலானது. இது தொடர்பான செய்தி பல்வேறு ஊடகங்களிலும் வெளியானது.

ஆனால், இந்த சம்பவத்தை திட்டவட்டமாக மறுத்துள்ளது சியோமி நிறுவனம். சீன நிறுவனமான சியோமி, இந்தியாவின் முன்னணி மொபைல் போன் தாயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த நிலையில், இந்த வீடியோ வெளிவந்தது கவனிக்கத்தக்கது.

இந்த விவகாரம் குறித்து சியோமி நிறுவனத்தில் இந்திய கிளையின் துணைத் தலைவர் மானு குமார் ஜெயின் விளக்கம் அளித்துள்ளார். அதில், ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் தீ பிடித்து எரிவது போன்று வெளியான தகவல் தவறானது என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக வெளியான வீடியோ உண்மையானதா?

TechCase என்னும் வெப்சைட் சிசிடிவி வீடியோ மற்றும் எரிந்த நிலையில் இருந்த ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனை வெளியிட்டிருந்தது. அந்த வீடியோ அதிகாரப்பூர்வமானது அல்ல என்றபோதிலும், இணையதளத்தில் வைரலானது. மேலும், அந்த வீடியோவில் பார்க்கும்போது, ஒரு போன் தீப்பிடித்து எரிகிறதே தவிர, ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் தான் எரிகிறது என்பதை உற்றுநோக்க முடியவில்லை. எனினும், TechCase வெப்சைடாது, எரிந்துபோன ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனின் படத்தையும், அதுவாங்கப்பட்ட கடை குறித்தும் பகிர்ந்தது.

இந்த நிலையில், வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து அந்த வீடியோ வெளியானது என்றும், அந்த வீடியோவில் தீப்பிடித்து எரிவது, ரெட்மி நோட் 4 அல்ல என்று மானு குமார் ஜெயின் விளக்கம் அளித்துள்ளார்.

ரெட்மி நோட் 4 தீப்பிடித்தது உண்மையா?

பெங்களூரில் சியோமி நோட் 4 ஸ்மார்ட்போன் தீ பிடித்தது என்பது உண்மைதான். அர்ஜூன் என்பவர் பெங்களூருவில் உள்ள பூர்விகா மொபைல் ஸ்டோரில் கடந்த ஜூலை 1-ம் தேதி போன் வாங்கியிருக்கிறார். அந்த போன் ஜூலை 17-ம் தேதி அன்று பாதிப்படைந்துள்ளது. சியோமி நிறுவனத்தின் சார்ஜரை பயன்படுத்தால்,வெறொரு நிறுவனத்தின் சார்ஜரை பயன்படுத்தியதால் போன் பாதிப்படைந்தது என்றும், அதற்கு எக்ஸ்சேன்ச் செய்து புதிய போன் வழங்கப்பட்டதாக சியோமி தெரிவித்துள்ளது.

இது தொடர்பான சியோமி வெளியிட்டுள்ள தகவல் தெரிவிப்பதாவது: மற்ற நிறுவன சார்ஜரால் போன் பாதிக்கப்பட்ட போதிலும், அந்த போன் ஜூலை 24- ம் தேதி எக்ஸ்சேன்ச் செய்யப்பட்டது.எனவே, வாடிக்கையாளர்கள் சியோமியின் சார்ஜரையே உபயோகப்படுத்த வேண்டும் என அறிவுறுத்துகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படியென்றால் அந்த வீடியோ?

இது குறித்து சியோமி அளித்துள்ள விளக்கம்: மொபைல் போன் தீப்பிடித்து எரிவது போல வெளியான வீடியோ பூர்விகா மொபைல் ஸ்டோரில் எடுக்கப்பட்டுள்ளது அல்ல. அது, கேரளாவில் உள்ள அனமானகாட்டில் உள்ள ரீடெய்லர் ஸ்டோரில் உள்ள சிசிடிவி காட்சி. அதில் வரும் நபர், அர்ஜூன் அல்ல.

இந்த விவகாரம் குறித்து TechCase- பதிவு செய்த செய்தி, பொறுப்பற்ற முறையிலும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. இது தொடர்பான சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளது சியோமி.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close