சியோமி ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை குறைப்பு!

சியோமி ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனுக்கு ரூ.1000 விலை குறைப்பு செய்யப்படுவதாக சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Xiaomi, Smartphones, Xiaomi Redmi Note

சியோமி ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனுக்கு ரூ.1000 விலை குறைப்பு செய்யப்படுவதாக சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, சியோமி ரெட்மி 4 ஸ்மார்ட்போனின் விலை தற்போது ரூ.9,999 என்ற விலை முதல் தொடங்குகிறது.

3ஜி.பி ரேம் மற்றும் 32 ஜி.பி ஸ்டோரேஜ் கொண்ட சியோமி ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9999. இதேபோல, 4ஜி.பி ரேம் 64 ஜி.பி ஸ்டோரேஜ் கொண்ட சியோமி ரெட்மி நோட் 4-ன் விலை ரூ.11,999 என்பதாகும். இந்த விலை குறைப்பானது எம்ஐ.காம் மற்றும் பிளிப்கார்டு என அனைத்திற்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மோட்டோ ஜி5( Moto G5), நோக்கியா 5 (Nokia 5 ) மற்றும் சாம்சங் கேலக்ஸி ஜே7 (Samsung Galaxy J7) ஆகிய ஸ்மார்ட்போன்கள், சியோமி ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனுடன் கடும் போட்டியை சந்திக்க நேரிட்டுள்ளது.

பிளிப்கார்டு ஆஃபர்

பிளிப்கார்டு இணையதளத்தில் சியோமி ரெட்மி நோட் 4-க்கு எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் உள்ளதோடு, குறிப்பிட்ட வங்கியின்( Axis Bank Buzz credit cards) கிரெடிட் கார்டுக்கு 5 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. வட்டியில்லா மாதாந்திர தவணையும் (நோ-காஸ்ட் இ.எம்.ஐ) உள்ளது.

சியோமி ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்

சியோமி நிறுவனமானது ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனை கடந்த ஜனவரி மாதம் அறிமுகம் செய்தது. 2ஜி.பி, 3ஜி.பி மற்றும் 4 ஜி.பி ரேம் என்ற வகைகளில் வெளியிடப்பட்டது. எனினும் 2 ஜி.பி ரேம் வகையானது நிறுத்தப்பட்டது.

  • 5.5 இன்ச் ஃபுல் எச்.டி டிஸ்ப்ளே (1080×1920 பிக்சல்ஸ்)
  • ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 எஸ்.ஓ.சி ப்ராசஸர்(octa-core Qualcomm Snapdragon 625 SoC)
  • மைக்ரோ எஸ்.டி கார்டு சப்போர்ட்(128 ஜி.பி வரை) உள்ளது.
  • ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தில் செயல்படக்கூடிய இந்த ரெட்மி நோட் 4, 13 எம்.பி ரியர் கேமரா மற்றும் 5 எம்.பி செல்ஃபி கேமராவை கொண்டுள்ளது.
  • 4100mAh பேட்டரி திறனுடன் வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன் ப்ளாக், டார்க் கிரே, கோல்டு ஆகிய நிறங்களில் வெளிவருகிறது.

 

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Xiaomi redmi note 4 india price cut

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com