ரெட்மி நோட் 5A, ஆகஸ்ட் 21-ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5A, ஸ்மார்ட்பான் சீனாவில் ஆகஸ்ட் 21-ம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. சினாவின் ஃபெய்ஜிங்கில், அந்நாட்டு நேரப்படி மாலை 7:30 மணியளவில் இந்த நிகழ்ச்சி தொடங்குகிறது. இந்திய நேரப்படி மாலை 5.00 மணிக்கு இந்த நிகழ்ச்சி தொடங்குகிறது.
சியோமி ரெட்மி நோட் 5A, அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாகவே, சில புகைப்படங்கள் இணையதளத்தில் கசிந்தன. மேலும், சியோமி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லீ ஜன், இந்த ஸ்மார்ட்போன் குறித்த சில புகைபடங்களை வெளியிட்டிருந்தார்.
சியோமி ரெட்மி 5A ஸ்மார்ட்போனை பொறுத்தவரையில், இரண்டு வகையாக வெளிவர இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி MDE6 மற்றும் MDE6S என்ற மாடல்களில் வெளிவரலாம். இந்த ஸ்மார்ட்போனில், பின்வரும் சிறப்பம்சங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 2 ஜி.பி ரேம் மற்றும் 16 ஜி.பி ஸ்டோரேஜ் கொண்ட மாடலில் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 425 ப்ராசஸர்
- மற்றொரு மாடலில் 5.5 இன்ச் எச்.டி டிஸ்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளம்
- 16 எம்.பி ரியல் கேமரா மற்றும் 5 எம்.பி செல்ஃபி கேமரா
- 3000mAh திறன் கொண்ட பேட்டரி இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
முன்னதாக, இந்திய சந்தையில் வெளியான ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன், சக்சஸ்ஃபுல் ஸ்மார்ட்போனாக வலம் வந்து கொண்டிருக்கிறது. ரெட்மி நோட் 4 அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுரை 2 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சியோமி நிறுவனம் தெரிவிக்கிறது. சியோமி நிறுவனமானது இந்திய சந்தையில் இரண்டாவது இடத்தில் நீடிப்பதற்கு, ரெட்மி நோட் 4 மற்றும் ரெட்மி சீரியசில் வெளிவரும் ஸ்மாட்போன்கள் முக்கிய காரணமாக இருந்து வருகின்றன.
இந்த நிலையில், அதனை பலப்படுத்தும் விதமாக, ரெட்மி சீரியசில் மற்றொரு போன், அறிமுகப்படுத்த சியோமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி அந்த ஸ்மார்ட்போன் எம்.ஐ 5X என்பதாக இருக்க வாய்ப்புள்ளது. எனினும், சியோமி சீனாவில் அறிமுகம் செய்யும் 5A ஸ்மார்ட்போனானது, இந்திய சந்தையில் எப்போது தாக்கத்தை ஏற்ப்படுத்தப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.