சியோமி நிறுவனமானது, டுயல் கேமரா வசதி கொண்ட அந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போனை இந்தியாவில் முதல்முறையாக அறிமுகம் செய்யவுள்ளது.
இது தொடர்பாக சியோமி இந்தியா-வின் துணைத் தலைவரும், நிர்வாக இயக்குனருமான மனு குமார் ஜெயின் ட்விட்டரில் இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், சியோமி இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ள டுயல் ரியல் கேமரா, கொண்ட ஸ்மார்ட்போன் எது என தெரிந்து கொள்ள ஆர்வமா? அடுத்த மாதம் அது தெரிந்துவிடும். உங்களால் அந்த ஸ்மார்ட்போன் எது என யூகிக்க முடிகிறதா? என்று ட்விஸ்ட் வைத்துள்ளார்.
அவரின் அந்த ட்வீட்டுக்கு, பெரும்பாலோர் பதிலளித்துள்ளனர். அதில், பெரும்பாலானோர் எம்.ஐ 6 என்று பதில் அளித்துள்ளனர். மேலும், எம்.ஐ5X ஸ்மார்ட்போன் என்றும் பதிலளித்துள்ளனர். இந்தியாவில் எம்.ஐ போன்கள் என்றாலே அதற்கென தனி மதிப்பு உள்ளது. 2017-ம் ஆண்டின் முதல் காலாண்டு மற்றும் இரண்டாம் காலாண்டில் ரெட்மி நோட் 4 அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போனாக திகழ்ந்தது. சாம்சங் ஜே சீரியஸ் போன்களை ரெட்மி நோட் 4 பின்னுக்குத் தள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.ஐ 6 சிறப்பம்சங்கள்
- 5.15 இன்ச் டிஸ்ப்ளே(ஃபுல் எச்.டி ரிசொலூசன்)
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர்
- எம்.ஐ 6 ஸ்மார்ட்போனை பொறுத்தவரை இரண்டு வகைகளில் வெளிவருகிறது. முதலாவதாக 6 ஜி.பி ரேம் உடன் 64 ஜி.பி மற்றும் 128 ஜி.பி ஸ்டோரேஜ் என இரண்டு வகைகளில் வெளிவருகிறது. 12 எம்.பி + 12 எம்.பி என டுயல் ரியல் கேமரா உள்ளது. அவற்றில் வைடு ஆங்கில் லென்ஸ் மற்றும் டெலிபோட்டோ லென்ஸ் உள்ளன.
- 3,350mAh திறன் கொண்ட பேட்டரியை கொண்டுள்ளது
இதேபோல, சியோமி மற்றொரு டுயல் ரியர் கேமரா சிறப்பம்சம் கொண்ட எம்.ஐ 5X ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்தது. அந்த ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் டிஸ்பிளே(ஃபுல் எச்.டி ரிசொலூசன்)
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 ஆக்டோ-கோர்-பிராசஸர்
- 12 எம்.பி + 12 எம்.பி டுயல் ரியர் கேமரா
- 3080mAh பேட்டரி திறனை கொண்டுள்ளது.
- 4 ஜி.பி ரேம் மற்றும் 64 ஜி.பி ஸ்டோரேஜ்
இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இவற்றில் எது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது என்பதை பொறுத்திருந்து தான் தெரிந்து கொள்ள முடியும்.