YouTube online-games offering: யூடியூப் நிறுவனம் ஆன்லைன் கேம்களை சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆன்லைன் கேம்களை விளையாடுவதற்கான தளத்தை யூடியூப் உள்நாட்டில் சோதித்து வருகிறது என்று வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
யூடியூப் மிகவும் பிரபலமான வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகும். அனைத்து துறை தகவல்களையும் அதில் பெற முடியும். பொழுதுபோக்கு, கல்வி, செய்தி என பல்வேறு தகவல்களை பெறலாம். வீடியோ வடிவில் மிகவும் எளிதாக பெறலாம். யூடியூப் பல்வேறு உலக மொழிகளில் செயல்படுகிறது.
இந்நிலையில் யூடியூப் தனது அடுத்த கட்ட முயற்சியாக சொந்தமாக கேமிங் தளத்தை உருவாக்கி வருகிறது. ‘பிளேஎபிள்ஸ்’ எனப்படும் புதிய யூடியூப் தயாரிப்பை சோதித்து வருகிறது. தனது தாய் நிறுவனமாக கூகுள் ஊழியர்களிடம் இதை சோதனை செய்ய அழைப்பு விடுத்துள்ளது.
இந்த கேம்களை யூடியூப் வெப் அதாவது கம்ப்யூட்டர், லேப்டாப்களில் பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்டு, ஆப்பிள் போன்களிலும் பயன்படுத்தலாம் என அறிக்கை கூறியுள்ளது.
யூடியூப்பின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "நிறுவனம் கேமிங்கில் நீண்ட காலமாக கவனம் செலுத்தி வருகிறது. புதிய அம்சங்களைப் பரிசோதித்து வருகிறது. அதனால் இப்போது அறிவிக்க எதுவும் இல்லை" என்று கூறினார். எனினும் யூடியூப் கேம்மிங் தளத்தை உருவாக்கி வருகிறது என்பது தெரியவந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“