யூடியூப் தளமானது புதியதாக தனது லோகோவை மாற்றியமைத்துள்ளது. அதோடு புதிய வசதிகளையும் அறிகப்படுத்தியுள்ளது.
Advertisment
கூகிள் நிறுவனத்தின் யூடியூப் தளமானது வீடியோக்களை பார்க்கும் வசதி கொண்டது என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். இந்த நிலையில், பிரபலமான இந்த யூடியூப் தளமானது, தனது லேகோவை மாற்றியுள்ளது. அதோடு, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆப்ஸ்-க்ளுக்கு சில அப்டேட்ஸ்-ம் வழங்கப்பட்டுள்ளது. யூடியூப் ஆரம்பிக்கப்பட்டு 12 ஆண்டுகள் ஆகும் நிலையில், முதல் முறையாக அதன் லோகோவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மொபைல் ஆப்ஸுல் , நேவிகேஷன் டேப்ஸ், அக்கோண்ட் டேப்ஸ் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும், வீடியோக்களை தாங்கள் பார்க்க விரும்பும் வேகத்தில் பார்க்கும் வசதியும் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வசதி ஏற்கெனவே டெஸ்க்டாப்-ல் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்வீப் செய்து முந்தைய வீடியோக்கள் மற்றும் அடுத்த வீடியோக்களை பார்த்துக் கொள்ளும்படியான வசதி விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த வசதி சில மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யூடியூப் ப்ளேயரில் கொண்டுவரப்பட்டுள்ள ஒரு மாற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதாவது, யூடியூப் ப்ளேயரானது வீடியோ வகைக்கு ஏற்ப, வடிவமைப்பை மாற்றிக்கொள்கிறது. இந்த வசதியின் மூலம் வீடியோ பார்க்கும் போது சிறந்த அனுபவத்தை பெற முடியும் என்கிறார் தலைமை ப்ராடெக்ட் ஆபீஸர், நில் மோகன்.
மேலும், ஃபுல் ஸ்கிரீனில் வீடியோ பார்க்கும்போதே, பரிந்துரைக்கப்படும் விடியோவையும் காணமுடியும் வகையிலான வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டெஸ்க்டாப் டிசைனில் புதியதாக “டார்க் தீம்” அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வீடியோ பார்க்கும்போது, பேக்ரவுண்ட் டார்க்காக மாற்றிக் கொள்ளவும் முடியும்.