நுபியா Z17S, நுபியா Z17 மினிS சீனாவில் அறிமுகம்... 4 கேமராக்களுடன் அசத்தல்!

நுபியா Z17S (Nubia Z17S) மற்றும் நுபியா மினிS(Nubia Z17 miniS ) ஆகிய ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இசட்.டி.இ (ZTE) நிறுவனமானது நுபியா Z17S (Nubia Z17S) மற்றும் நுபியா மினிS(Nubia Z17 miniS ) ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் இரண்டும் நான்கு கேமரா என்ற சிறப்பம்சத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. 6 ஜி.பி ரேம் மற்றும் 64 ஜி. பி ஸ்டோரேஜ் உடன் வெளிவரும் நுபியா Z17S (Nubia Z17S) ஸ்மார்ட்போனின் விலை சீன மதிப்பில் RMB 2,999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இந்த ஸ்மார்ட்போனின் விலை தோராயமாக ரூ.29,594 ஆகும். இதேபோல, 8 ஜி.பி ரேம் மற்றும் 128 ஜி. பி ஸ்டோரேஜ்-ல் வெளிவரும் நுபியா Z17S ஸ்மார்ட்போனில் விலை சீன மதிப்பில் RMB 3,999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நுபியா Z17S ஸ்மார்ட்போனின் விலையை இந்திய மதிப்பில் பார்க்கும்போது தோராயமாக ரூ.39,400 என்றிருக்கிறது.

நுபியா Nubia Z17 மினிS (Nubia Z17 miniS) ஸ்மார்ட்போன் விலை சீன மதிப்பில் RMB 1,999 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,726  என்றிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு சீனாவில் இன்று தொடங்கியுள்ள நிலையில், அக்டோபர் 19-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.

நுபியா  Z17 ஸ்மாட்போனில், 12எம்.பி + 23 எம்.பி ரியல் கேமரா மற்றும் 5 எம்.பி + 5 எம்.பி முன்புற கேமராவை கொண்டிருக்கிறது. குவார்காம் ஸ்னாப்டிராகன் 835 ஆக்டா-கோர் ப்ராசஸர் மற்றும் 3100 mAh பேட்டரி திறனை கொண்டிருக்கிறது. மைக்ரோ எஸ்.டி கார்டு மூலம் 200 ஜி.பி வரை அதிகரித்துக் கொள்ளலாம். ஆண்ட்ராய்டு 7.1 இயங்குதளத்தை கொண்டிருக்கிறது.

ZTE Nubia, Nubia Z17S, Nubuia Z17 miniS,four cameras, Smartphones

நுபியா Nubia Z17 மினிS

மிட்-ரேன்ஞ் ஸ்மார்ட்போனான நுபியா Nubia Z17 மினிS-ல் 5.2 இன்ச் டிஸ்ப்ளேவை ( 1920 x 1080 பிக்சல்ஸ்) கொண்டிருக்கிறது. 13 எம்.பி + 13 எம்.பி டுயல் ரியல் கேமரா மற்றும் 16 எம்.பி + 5 எம்.பி முன்பக்க என்ற கேமரா சிறப்பம்சத்தை கொண்டிருக்கிறது. 3200 mAh பேட்டரி திறன் மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 652 ப்ராசஸரை கொண்டிருக்கிறது. 6ஜி.பி ரேம் மற்றும் 64 ஜி.பி ஸ்டோரேஜ் உள்ள நிலையில், ஆண்ட்ராய்டு 7.1 இயங்குதளத்தில் செயல்படக்கூடியது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close