SBI கிரெடிட் கார்டு அல்லது SBI கார்டுக்கு விண்ணப்பிப்பது இந்த நாட்களில் மிகவும் எளிமையானது. இந்தக் கார்டில் பல நன்மைகள் இருப்பதால் வாடிக்கையாளர்கள் எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கின்றனர்.
ருப்பினும், SBI கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களும் உள்ளன. அந்த வகையில், SBI கிரெடிட் கார்டில் விதிக்கப்படும் கட்டணங்கள் குறித்து பார்க்கலாம்.
வருடாந்திர கட்டணம்
வாடிக்கையாளர்கள் SBI கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதற்கு SBICPSL (ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கார்டுகள் மற்றும் பேமென்ட் சர்வீசஸ் லிமிடெட்) க்கு ஆண்டுக் கட்டணமாக ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டும்.
இது ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே செலுத்தும் கட்டணம் ஆகும். இது தொடர்பான முழுமையான விவரங்களை வங்கி உங்களுக்கு தெரிவித்து விடும்.
புதுப்பித்தல் கட்டணம்
ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்தல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது ஒரு வாடிக்கையாளருக்கு மற்றொரு வாடிக்கையாளருக்கும் வெவ்வேறு அட்டை வகைகளுக்கும் மாறுபடலாம்.
பணம் செலுத்தும் கட்டணம்
எஸ்பிஐ கார்டுதாரர்கள், பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளில் ரூ. 250 மற்றும் பொருந்தக்கூடிய வரிகளைச் செலுத்துவதன் மூலம் தங்கள் நிலுவைத் தொகையைச் செலுத்தலாம்.
இதற்கு, அவர்கள் தங்கள் கிரெடிட் கார்டு எண் மற்றும் தொகையை பே-இன்-ஸ்லிப்பில் குறிப்பிட்டு, அதை கிளை கவுண்டரில் டெபாசிட் செய்ய வேண்டும்.
இந்தப் பணத்தை செலுத்திய பிறகு, அட்டைதாரர்களுக்கு ஒப்புகை ரசீது வழங்கப்படும்.
ரொக்க அட்வான்ஸ் கட்டணம்
SBI கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பணம் எடுப்பதற்கு 500 ரூபாய்க்கு 2.5% பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படும்.
வட்டி இல்லாத சலுகைக் காலம்
வட்டியில்லா சலுகைக் காலம் 20 முதல் 50 நாட்கள் ஆகும். வாடிக்கையாளர் கடந்த மாத நிலுவைத் தொகையைச் செலுத்தியிருந்தால் மட்டுமே வட்டியில்லா கடன் காலம் பொருந்தும்.
நிதிக் கட்டணங்கள்
வாடிக்கையாளர் தனது நிலுவைத் தொகையை முழுமையாக செலுத்தவில்லை என்றால், SBI கார்டுதாரர்கள் செலுத்தப்படாத EMI தவணைகள் உட்பட அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் மாதாந்திர வட்டி விகிதத்தில் நிதிக் கட்டணங்களைச் செலுத்த வேண்டும்.
தாமதமாக செலுத்தும் கட்டணங்கள் (LPC)
நிலுவைத் தொகை ரூ. 500க்கு அதிகமாகவும், ரூ. 1000க்கு குறைவாகவும் இருந்தால், எல்பிசி ரூ. 400 ஆக இருக்கும். ரூ. 1000க்கு மேல் மற்றும் ரூ. 10,000 வரையிலான நிலுவைத் தொகைகளுக்கு, எல்பிசி ரூ. 750 ஆக காணப்படும்.
நிலுவைத் தொகைக்கு ரூ. ரூ.10,001 முதல் ரூ.25,000, எல்பிசி ரூ.950 கட்டணம் ஆகும்.
அதிகப்படியான கட்டணங்கள்
நிலுவைத் தொகை SBI கார்டு வரம்பை விட அதிகமாக இருந்தால், மிகை வரம்புக் கட்டணம் விதிக்கப்படும், இது மிகை வரம்புத் தொகையில் 2.5% அல்லது ரூ. 600, எது அதிகமோ அதுவாக இருக்கும்.
பேமெண்ட் டிஸ்ஹானர் கட்டணம்
இதற்கு, எஸ்பிஐ கார்டுதாரர்கள் குறைந்தபட்ச கட்டணமான ரூ.500க்கு உட்பட்டு, பேமெண்ட் தொகையில் 2% கட்டணமாக செலுத்த வேண்டும்.
கார்டு மாற்ற
அட்டையை மாற்றினால், இழப்பு, திருட்டு, சேதம் காரணமாக, வாடிக்கையாளர் ரூ.100 முதல் ரூ.250 வரை (ஆரூமுக்கு ரூ.1500) கட்டணம் செலுத்த வேண்டும்.
வெளிநாட்டு நாணய பரிவர்த்தனை கட்டணம்
அனைத்து அட்டை பயனர்களுக்கும் வெளிநாட்டு நாணய பரிவர்த்தனை கட்டணம் 3.5% ஆகும்.
இருப்பினும், எலைட் (Elite) மற்றும் ஆரம் கார்டுதாரர்களுக்கு (Aurum Cardholders), பரிவர்த்தனை கட்டணம் 1.99% ஆகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/