Advertisment

ஆடிப்பெருக்கு: ஆடல் பாடலுடன் அசத்திய சென்னை மாணவிகள்!!

Aadi 18 Special:ஆடிப்பெருக்கையொட்டி இன்று ஜூலை 31 ஆம் தேதி ஆடல் பாடல் என கிராமிய மணம் பொங்க பல்வேறு கலை நிகழ்ச்சிகளை அவர்கள் நடத்திக் காட்டினர்.

author-image
Harinee Chandrasekaran
New Update

Aadi Perukku Celebration In Dr MGR Janaki Women's College: தமிழ்நாட்டில் புராதனமாக கொண்டாடப்படும் ஒரு நிகழ்வு ஆடிப்பெருக்கு. காவிரிக் கரையில் பிரசித்தி பெற்ற இந்த விழாவை சென்னையில் கூவம் கரையிலும் நிகழ்த்தி அதிசயிக்க வைக்கிறார்கள் எம்ஜிஆர் ஜானகி கல்லூரி மாணவிகள்.

ஆடிப்பெருக்கையொட்டி இன்று ஜூலை 31 ஆம் தேதி ஆடல் பாடல் என கிராமிய மணம் பொங்க பல்வேறு கலை நிகழ்ச்சிகளை அவர்கள் நடத்திக் காட்டினர். மாணவிகளின் கலாச்சார உடை, நடனம் ஆகிய அத்தனையும் தமிழர் மரபையும் பண்பாட்டையும் பறைசாற்றுவதாக இருந்தன. கோலாட்டம், தப்பாட்டம், கரகாட்டம் என தேர்ந்த கலைக் குழுவினரை போல மாணவிகள் நடத்திய நிகழ்ச்சிகள் பிரமிக்க வைத்தன.

நிஜமாகவே இவர்கள் பட்டணத்து பட்டாம்பூச்சிகளா? அல்லது கிராமிய தேவதைகளா? என பார்த்தவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டதை தவிர்க்க முடியவில்லை. அந்த காட்சிகள் இங்கே.

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment