Advertisment

பரத்தின் டார்க் காமெடி படம் "சிம்பா" டீசர்!

அதுபோன்று வெளிவரவுள்ள மற்றொரு தமிழ் படம் 'சிம்பா'. பரத் நடித்துள்ள இப்படத்தை அரவிந்த் ஸ்ரீதர் என்பவர் எழுதி இயக்கியிருக்கிறார்

author-image
Anbarasan Gnanamani
New Update

மூடர் கூடம், சூது கவ்வும், மும்பை எக்ஸ்பிரஸ் போன்ற படங்களை டார்க் காமெடி படங்கள் என்று அழைப்பதுண்டு. அந்தக் காலத்தில் வெளிவந்த விசுவின் 'சிதம்பர ரகசியம்' படமும் இந்த வகையைச் சேர்ந்தவை என்று கூறலாம். அதுபோன்று வெளிவரவுள்ள மற்றொரு தமிழ் படம் 'சிம்பா'. பரத் நடித்துள்ள இப்படத்தை அரவிந்த் ஸ்ரீதர் என்பவர் எழுதி இயக்கியிருக்கிறார்.

எப்போதும் தனிமையையே நாடும் ஒருவனைச் சுற்றி நடக்கும் கதை இது. பரத் லீட் ரோலில் நடிக்க பிரேம்ஜி அமரன், ரமணா, பானுஸ்ரீ மெஹ்ரா ஆகியோர் உடன் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

Bharath
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment