ஜீவாவின் மிரட்டலான ‘கீ’ பட டீசர்! ஹிட் கொடுக்குமா?
கலீஸ் என்பவரது இயக்கத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி, அனைகா சோதி, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடித்துள்ள சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படம் கீ. இணைய பயன்பாடுகள் மூலம் நடக்கும் தவறுகளை சுட்டிக் காட்டும் கதையம்சத்தில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கோவிந்த் பத்மசூர்யா என்பவர் இப்படத்தில் வில்லனாக அறிமுகமாகியுள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.