இங்கு யானைகளை பிடிக்காதவர்கள் என்று யார் தான் இருக்க முடியும். அனைவருக்கும் யானைகள் பிடிக்கும். சிலர் கார்ட்டூனில் பார்த்து ரசிப்பது உண்டு. சிலரோ கோவில் யானைகளை பார்த்து சவாரி செய்ய நினைப்போம். நமக்கும் யானைக்குமான உறவானது அவ்வளவே. ஆனால் யானைகள் காட்டில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் நுழைந்தாலோ, விளை நிலங்களை சேதம் செய்தாலோ நாம் யானைகளை குறை கூறுகின்றோம். யானைகளை காட்டுக்குள் அனுப்பும் திட்டம் சில நேரங்களில் தோல்வியில் முடிந்தால், கும்கிகளாக மாற்ற முடிவு செய்தால், வனத்துறையினரை குறை கூறுகின்றோம். ஆனால் யானைகள் குறித்தோ, வனத்துறையினர் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பது குறித்தோ நாம் ஆராய மறந்துவிடுகின்றோம். யானைகள் ஏன் கும்கிகள் ஆக்கப்படுகிறது? இங்கே தெரிந்து கொள்வோம்.