டெல்லியில் பிறந்த சில மணி நேரத்தில் நடந்த அதிசய குழந்தை!
பொதுவாக, ஒரு குழந்தை பிறந்து சில மாதங்கள் ஆன பின்னர்தான் தவழ ஆரம்பிக்கும். பின்பு கொஞ்சம் கொஞ்சமாக உட்காரத்தொடங்கி, பின் படிப்படியாக நடக்க ஆரம்பிக்கும். ஆனால் டெல்லியில் பிறந்த குழந்தை ஒன்று, பிறந்து சில மணிநேரங்களிலேயே செவிலியரின் உதவியுடன் நடக்கப்பழகியுள்ளது. செவிலியர் ஒருவர் தன்னுடைய கைகளில் அந்த குழந்தையை தாங்கிப் பிடித்துக் கொள்ள, தன்னுடைய பிஞ்சு கால்களால் அக்குழந்தை நடக்கப் பழகும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.