சென்னையில் 350க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு நோய் தொற்று பரவியிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. முறையாக குப்பையை நீக்காமல் இருப்பது, நீர் தேங்குவது போன்றவற்றால் உருவாகும் கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் நோய் பரவுகிறது. இந்த நோய் அதிகம் பரவுவதை தடுக்கும் வகையில் போதுமான முன்னேற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.