New Update
உக்ரைனில் உயிரிழந்த நவீன் எப்படிக் கொல்லப்பட்டார்?
உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், 6-வது நாளாக நேற்று நடைபெற்ற தாக்குதலில் இந்தியாவின் கர்நாடகாவை சேர்ந்த 21 வயதான மருத்துவ மாணவர் மரணமடைந்தார். பதுங்கு குழியில் தங்கியிருந்த அவர், மளிகை பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்றபோது ரஷ்ய படை தாக்குதலில் சிக்கிக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.