ஜோலார்பேட்டை குடிநீர் ரயிலுக்கு டாட்டா… மழை அளவு அதிகரித்ததால் சேவை நிறுத்தம்..
சென்னையில் கோடை காலத்தில் நிலவி வந்த கடும் வறட்சியை சரி செய்ய வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. தென்மேற்கு பருவமழை காலத்தில் சென்னை கணிசமான மழையை பெற்றதால் இந்த தண்ணீர் ரயில் சேவை அக்டோபர் மாதம் 08 முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.