பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போரின் 20-ம் ஆண்டு வெற்றி தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.பாகிஸ்தான் சதியை முறியடிக்க 'ஆப்பரேஷன் விஜய்' என்ற பெயரில் இந்தியா 1999 மே 26ம் தேதி ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. வான்வழித் தாக்குதல் மூலம் இந்திய ராணுவம், தனது நிலைகளை ஒவ்வொன்றாக கைப்பற்ற ஆரம்பித்தது.
Advertisment
1999ம் ஆண்டு ஜூலை 26ல் இந்தியா, கார்கில் பகுதியை முழுவதுமாகக் கைப்பற்றி இந்திய கொடியை பறக்க விட்டது. அப்போது இந்தியாவின் பிரதமராக மறைந்த வாஜ்பாய் பதவி வகித்தார். இதனால் வாஜ்பாய்க்கு கார்கில் நாயகன் என்ற சிறப்பு பெயரும் உண்டு.
அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 26 ஆம் தேதி கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டுக்காக தங்களது இன்னுயிரை இழந்த ராணுவ வீரர்களை இந்த நாளில் நினைவில் கொள்வது இந்தியர்களின் தலையாய கடமை ஆகும்.
கார்கில் போர் துவங்க காரணமாக இருந்தவர் யார்? ஆப்ரேஷன் விஜய் என்றால் என்ன? போன்ற பல்வேறு கார்கில் வரலாற்று தகவல்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் சிறப்பு வீடியோ தொகுப்பாக உங்களின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளது.