சென்னை மயிலாப்பூரில் உள்ள அருண்டேல் தெருவில் அமைந்துள்ளது ராயர் மெஸ். இந்தப் பகுதியில் இரண்டுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை அடுத்தடுத்து நிறுத்த முடியாது.
அவ்வளவு குறுகிய இடத்தில், பொங்கல், இட்லி மற்றும் வடைகளுடன் நாவிற்கு விருந்தளிக்கிறது இந்த உணவகம். நெடுந்தூரத்தில் இருந்தும் வந்து வாடிக்கையாளர்கள் உணவருந்துகின்றனர்.
85 ஆண்டுகால பாரம்பரிய மிக்க இந்த உணவகம் குறித்து பார்க்கலாம்.