Advertisment

ராஜீவ்காந்திக்கு சான்றிதழ் வழங்கும் தகுதி சீமானுக்கு கிடையாது: கே.எஸ் அழகிரி காட்டம்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 31-வது நினைவு தினத்தை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

author-image
Janani Nagarajan
May 22, 2022 12:38 IST

Advertisment

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 31-வது நினைவு தினத்தை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மாநில காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் இரங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், செயல் தலைவர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

ராஜீவ் காந்தி புகைப்படத்திற்கு முன் மலர் அஞ்சலி செலுத்தியபின்பு, நாட்டில் சமத்துவத்தை நிலைநாட்டுவோம் என உறுதிமொழி ஏற்றனர்.

மேலும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட பேரறிவாளனின் விடுதலைக்கு தமிழக காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தனர். மே 19ஆம் நாள் வாயில் வெள்ளைத்துணி கட்டி அறப்போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை விமர்சித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான். அவரின் விமர்சனத்திற்கு கே.எஸ்.அழகிரி பதிலளித்துள்ளார்.

#Tamil Nadu Congress #Chennai #Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment