சீன அதிபர் வரவால் மகிழ்ச்சியடையும் முக ஸ்டாலின் ; இந்திய – சீன கலாச்சாரம் குறித்து பெருமிதம்
இந்த வார இறுதியில் பல்லவர்களின் முந்தைய தலைநகராக இருந்த மாமல்லபுரம் வருகை தருகிறார் சீன அதிபர் ஜிங்பிங். அவரின் வருகையை ஒட்டி மாமல்லபுரம் பாதுகாப்பு வளையத்திற்கு கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இரு நாட்டின் பண்டைய கலாச்சாரம், பண்பாடு, மற்றும் நாகரீகம் குறித்து யுவான் சுவாங் மேற்கொண்ட பயணங்களை மேற்கோள் காட்டி தன்னுடைய அறிக்கையை வெளியிட்டுள்ளார் முக ஸ்டாலின்.