வைபவ், பிரியா பவானி சங்கர் நடிப்பில் ‘மேயாத மான்’ படத்தின் டிரெய்லர். இந்தப் படத்தை ரத்னகுமார் இயக்கியுள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
சந்தோஷ் நாராயணன், பிரதீப் குமார் இருவரும் இணைந்து இந்தப் படத்துக்கு இசை அமைத்துள்ளனர். ஏற்கெனவே ‘மது’ என்ற பெயரில் இந்தப் படம் குறும்படமாக எடுக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.