Advertisment

நாகர்ஜுனா, சமந்தாவின் பேய் ராஜ்ஜியம்: வெளியானது 'ராஜு காரி கதி 2' டிரைலர்!

நாகர்ஜுனா, சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துள்ள 'ராஜூ காரி கதி 2' பேய் படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது

author-image
Anbarasan Gnanamani
New Update

ஓம்கர் இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு பேய் படம் 'ராஜூ காரி கதி'. அந்த வருடத்தின் சூப்பர் டூப்பர் ஹிட் படமாக இது அமைந்தது. ஹிந்தியில் 'ராஜா சாஹேப் கா கம்ரா' என்று இப்படம் ரீமேக் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து தெலுங்கில் இதன் இரண்டாம் பாகம் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் சிறிய நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் நாகார்ஜுனா, சமந்தா, சீரத் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர். காஜல் அகர்வால் முக்கியமான சிறப்பு பாத்திரத்தில் நடித்துள்ளார். இதனால், தெலுங்கு படவுலகில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஓம்கர் தான் இரண்டாம் பாகத்திற்கும் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.

இந்நிலையில், இரண்டாம் பாகத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Nagarjuna Mersal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment