அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நேர்கொண்டபார்வை திரைப்படம் இன்று வெளியானது. நடிகை ஸ்ரீதேவியின் கனவை நிறைவேற்றும் விதமாக அவரது கணவர் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்த படம் இது. 2016ல் வெளியான 'பிங்க்' இந்தி படத்தின் தழுவல் இது.
நேர்கொண்ட பார்வை படத்திற்கு அஜித் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்திருக்கிறது. சிவகார்த்திகேயன் உள்பட பிரபல நடிகர்கள் பலரும் இந்தப் படத்தின் வெற்றிக்கு வாழ்த்து கூறுகிறார்கள்.