New Update
Advertisment
பள்ளிக்கரணையில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் சாலையில் சென்று கொண்டிருந்த போது அவர் மீது பேனர் விழுந்தது. நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் மீது, லாரி ஏறியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஏற்கனவே உயர் நீதிமன்றம் பலமுறை பேனர்கள் வைக்க தடை விதித்திருந்தது. சுபஸ்ரீயின் மரணம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. ஏற்கனவே பிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் இந்த பிரச்சனை குறித்து பேசியிருந்தார். இந்நிலையில் கடந்த வாரம் வெளியான சூர்யாவின் காப்பான் படத்திற்கும் சென்னையின் காசி திரையரங்கு போன்ற முக்கியமான திரையரங்குகளில் பேனர்கள் வைக்கப்படவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.