இமைக்கும் நொடிக்குள் பெண்ணை காப்பாற்றிய ரியல் ஹீரோ...!

இன்னும் ஒரு நொடி தாமதமாகியிருந்தால் கூட, அந்தப் பெண் மீது ரயில் ஏறியிருக்கும்.

இன்னும் ஒரு நொடி தாமதமாகியிருந்தால் கூட, அந்தப் பெண் மீது ரயில் ஏறியிருக்கும்.

author-image
Anbarasan Gnanamani
New Update

சீனாவின் ஃபுஜியன் ரயில் நிலையத்தின் பிளாட்ஃபார்மில் நின்றுக் கொண்டிருந்த ஒரு பெண், அதிவேகமாக வந்த ரயில் முன் திடீரென பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அப்போது அங்கே நின்றுக் கொண்டிருந்த இளம் ரயில்வே ஊழியர் ஒருவர், நொடிப் பொழுதில் பாய்ந்து சென்று அப்பெண்ணை காப்பாற்றினார். இன்னும் ஒரு நொடி தாமதமாகியிருந்தால் கூட, அந்தப் பெண் மீது ரயில் ஏறியிருக்கும்.

Advertisment

இப்படியொரு காட்சியை சினிமாவில் கூட தத்ரூபமாகவும், இவ்வளவு துல்லியமாகவும் யாரும் எடுத்துவிட முடியாது. தற்கொலைக்கு முயன்ற அந்தப் பெண்ணுக்கு சிறு காயம் கூட ஏற்படவில்லை. ஆனால், காப்பாற்றிய அந்த ரயில்வே ஊழியருக்கு தான் அடிப்பட்டுள்ளதாம். எனினும், விலைமதிப்பற்ற ஒரு உயிரை காப்பாற்றிய அந்த ரியல் ஹீரோவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

அந்த வீடியோ இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

China

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: