சென்னை பல்கலைக்கழகம், சென்னை ஐ.ஐ.டி., கோவை பி.எஸ்.ஜி கலைக்கல்லூரி, முகமது சதக் கலைக்கல்லூரி மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் சி.ஏ.ஏவுக்கு எதிராகவும், ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறை எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிராகவும் போராடி வருகிறார்கள்.
Advertisment
சி.ஏ.ஏ-க்கு எதிராக தமிழகம் முழுவதும் வலுக்கும் போராட்டம்...
16ம் தேதி மே.வ முதல்வர் மம்தா பானர்ஜி கல்கத்தாவில் பேரணி நடத்தினார்.
அதே நாளில் கேரள முதல்வர் பினரயி விஜயன், எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா திருவனந்தபுரத்தில் போராட்டம் நடத்தினர்.
17ம் தேதி காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
இந்தியா முழுவதும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பலைகள் வந்தாலும் இந்த சட்டத்தை திரும்பப் பெற மாட்டோம் என திட்டவட்டமாக அறிவித்துள்ளார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.