தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம், இந்திய சினிமா ரசிகர்களை தனது ஸ்டைலால் கவர்ந்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 70-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பெங்களூருவில் பஸ் கண்டக்டராக பணியாற்றிய இவர் 1975-ஆம் ஆண்டு வெளியான இயக்குநர் பாலச்சந்தரின் அபூர்வராகங்கள் படத்தின் மூலம் தனது கலை பயனத்தைத் தொடங்கினார். அந்தப் படத்தில் ரஜினியின் அறிமுகமே ரஜினி ஒரு கேட்டை திறப்பது போல் இருக்கும். அப்போது திறந்த கதவு தான், அவரை இன்னும் இன்னும் உச்சத்திற்கு கொண்டு சென்றுக் […]