வீடியோ: ”தமிழே எங்கள் மொழி; தமிழே எங்கள் வழி”: தாய்தமிழுக்கு சிங்கப்பூர் தமிழர்களின் மரியாதை
எங்கு செல்கிறார்களோ அங்கு தமிழ் சங்கத்தை நிறுவி, அதன் வாயிலாக தமிழ் மொழியை கடல் கடந்து உலகமெங்கும் ஒலிக்க செய்கின்றனர். சிங்கப்பூர் தமிழர்களின் பாடல் இது.
சிங்கப்பூரில் தமிழ் மொழி அதிகாரப்பூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள தமிழர்களில் ஆறில் ஒரு குழந்தை மூன்று வயதுக்குள் அதிகமான சொற்களை அறிந்து பேசும் நிலை உள்ளது. ஆங்கிலம் தொடர்பு மொழியாகத்தான் உள்ளது.
Advertisment
தமிழ்நாட்டிலிருந்து வேலை, கல்வி என பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு செல்பவர்கள், தங்களின் தாய்மொழிக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் பல நிகழ்வுகளை நிகழ்த்தி வருகின்றனர். எங்கு செல்கிறார்களோ அங்கு தமிழ் சங்கத்தை நிறுவி, அதன் வாயிலாக தமிழ் மொழியை கடல் கடந்து உலகமெங்கும் ஒலிக்க செய்கின்றனர்.
அதுபோல, சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள் ‘தமிழா! தமிழா! தமிழ் பேசு’ என்ற பாடலை பாடி வெளியிட்டுள்ளனர். எங்கு சென்றாலும், தடைகளை கடந்து தமிழ் மொழியை பேச வேண்டும் என்பதன் அவசியத்தை உணர்த்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
அந்த பாடல் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இப்பாடல் பலமுறை கேட்கத் தூண்டுவதாக உள்ளது எனவும், தமிழின் பெருமையை உணர்த்தும் வகையிலும் இருப்பதாகவும், பலரும் அப்பாடலுக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.