Advertisment

அவர் சக்கர நாற்காலியில்தான் அமர்ந்திருக்கிறார், ஆனால் அவரின் வாழ்க்கை மற்றவர்களை எழ செய்யும்

அவர் இப்போது என்னவாக இருக்கிறார் தெரியுமா? தன்னம்பிக்கை பேச்சாளர், ஓவியர், பாடகர், எழுத்தாளர், சொல்லிக்கொண்டே போகலாம். அவரின் வாழ்க்கையை அறிந்துகொள்ளுங்கள்

author-image
Nandhini v
New Update

திடீரென விபத்து ஏற்பட்டு, உங்களால் நடக்க முடியாது, குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என மருத்துவர் கூறினால் உங்களுக்கு எப்படி இருக்கும்? அனைத்து நம்பிக்கையையும் இழந்து வாழ்க்கையை இனி எதனால் அர்த்தப்படுத்த போகிறோம் என அதிர்ச்சியில் உறைந்திருப்போம். வாழ்வை அத்துடன் முடித்துக் கொள்ளலாமா என்றுகூட தோன்றும். அப்படித்தான் தோன்றியது பாகிஸ்தான சேர்ந்த முனிபா மசாரி. ஆனால், அவர் இப்போது என்னவாக இருக்கிறார் தெரியுமா? தன்னம்பிக்கை பேச்சாளர், ஓவியர், பாடகர், எழுத்தாளர், சொல்லிக்கொண்டே போகலாம்.

Advertisment

முனிபா மசாரி, தன் தந்தையின் சந்தோஷத்திற்காக 18 வயதில் தனக்கு விருப்பமில்லாத திருமணத்தை செய்துகொண்டார். அந்த திருமண வாழ்க்கையால் துளி மகிழ்ச்சியைகூட அவர் அனுபவிக்கவில்லை. திடீரென கார் விபத்து. அதில், அவரது கணவர் பிழைத்துக் கொள்கிறார். ஆனால் அவருக்கு முதுகெலும்பு, கை, தோள்பட்டை என பல இடங்களில் பலத்த காயம். இனி நடக்க முடியாது, குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

வாழ்க்கையே இருண்டுபோனது முனிபாவுக்கு. இனி எதற்காக வாழ வேண்டும் என நினைத்தார். ஆனால், அந்த மருத்துவமனையிலிருந்தே தன் வாழ்வை அர்த்தப்படுத்த பயணப்பட்டார். வரைந்து பழக்கப்பட்ட அவர், மீண்டும் வரைய துவங்கினார். பாடினார். தன்னம்பிக்கை பேச்சாளரானார். ஒவ்வொரு பயத்தையும் விட்டொழித்தார். முதலில், பிடிக்காத கணவரை விவாகரத்து செய்தார். குழந்தையை தத்தெடுத்தார். எத்தனையோ பேருக்கு நம்பிக்கை அளிக்கிறார்.

அவர் தன்னுடைய வாழ்க்கை குறித்து ஒருமுறை பேசிய வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், “உங்கள் மரணத்திற்கு முன் இறக்காதீர்கள்”, என கூறுவார். ஆம், மரணத்திற்கு முன் இறக்காதீர்கள்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment