சாலையில் நடந்துபோகும்போதும், கார், பைக் என வாகனங்களில் செல்லும்போதும் செல்ஃபோனையே உற்றதுணையாகக் கொண்டு பேசிக்கொண்டே செல்லும் நபரா நீங்கள்? அப்பொழுது இந்த வீடியோ உங்களுக்காகத்தான்.
சீனாவில் உள்ள குவாங்ஸி சாலையில் திடீரென ஒரு பெரும் பள்ளம் ஏற்படுகிறது. அட, இதிலென்ன ஆச்சரியம், நம்ம சென்னை அண்ணாசாலையிலேயே திடீர் திடீர்னு மாதம் ஒருமுறை பள்ளம் ஏற்படுகிறதே. அது சரிதான். அதில், பேருந்து, கார் சிக்கி மீட்க முடியாமல் மீட்டதெல்லாம் வேறு விஷயம். ஆனால், அந்த வாகனத்தின் ஓட்டுநர்கள் யாரும் செல்ஃபோன் பேசிக்கொண்டே அந்த பள்ளத்தில் சிக்கவில்லை.
ஆனால், சீனாவில் குவாங்ஸி சாலையில் ஏற்பட்ட பெரும்பள்ளத்தில், இருசக்கர வாகனத்தில் ரொம்ப பிஸியாக பேசிக்கொண்டே வந்த ஒருவர் விழுந்தார். தற்போதைக்கும் இந்த 17 நொடி வீடியோதான் நீங்கள் பார்க்க வேண்டிய முக்கியமான வீடியோ. அந்த பெரும்பள்ளம் 32 அடி நீளம் கொண்டது, 6 அடி ஆழம் கொண்டது என கூறப்படுகிறது. இந்த விபத்தில் சிக்கிய அந்நபருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டன.
இந்த வீடியோவை ஒருவர் முகநூல் பக்கத்தில் பகிர்ந்தார். இதனை, இக்கட்டுரை வெளியாகும் நேரம் வரை 84,000-க்கும் மேற்பட்டோர் பார்த்தனர் மற்றும் 1,600-க்கும் மேற்பட்டோர் விரும்பினர். நீங்களும் அந்த வீடியோவை பார்த்துவிடுங்கள். செல்ஃபோனில் பேசிக்கொண்டே சாலையில் செல்வதை தவிர்த்திடுங்கள்.