அண்மை காலங்களில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. பால், வயது, நாடுகள் பேதமின்றி தற்கொலைச் சம்பவங்கள் உலகம் முழுவதும் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
வாழ்க்கை என்றால் பிரச்சனைகள் சில எழத் தான் செய்யும் என்பதை மறக்கும் சிலர், அந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்கொலை ஒன்றையே தீர்வு என நினைப்பது எந்த விதத்திலும் சரியாகாது. தங்கள் உறவுகள் அனைத்தையும் மறந்து தற்கொலை செய்யும் நிகழ்வு மிகவும் கொடூரமானது!
இந்த சம்பவமானது சீனாவின் அன்ஹு மாகாணத்தில் உள்ள வூகு பகுதியில் நிகந்தது. மனமுடைந்த இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தில், அடுக்குமாடி குடியிருப்பின் 15-வது மாடியில் இருந்து குதிக்க காத்திருந்தார். ஆனால், அவரை பாதுகாக்க வரும் வீரரோ, தன் உயிரையும் பணயம் வைத்துப் அப்பெண்ணை மீட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.