Advertisment

லாட்டரியில் அடுத்தடுத்து அடித்த இரண்டு ஜாக்பாட்... $655,555 பெற்ற 19-வயது பெண்!

ஒரே வாரத்தில் அடுத்தடுத்து இரண்டு லாட்டரி பம்பர் பரிசின் மூலம் $655,555 பரிசுத் தொகையை வென்றுள்ளார் இந்த 19-வது வயதான இளம் பெண்.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
lottery

கோடீஸ்வரராக வேண்டும் என மக்கள் நினைத்து கனவு காண்பது என்பது இயல்பானது தான். ஆனாலும், லாட்டரி வாங்கி அதன் மூலம் கோடீஸ்வரராகுவது என்பது, நினைத்து பார்க்கமுடிகிறதா?அப்படிதான், அமெரிக்காவில் லாட்டரி மூலம் $655,555 டாலர்களை லாட்டரி பரிசாக பெற்றுள்ளார்.

Advertisment

19-வயதான ரோசா மோமிங்குயிஸ் என்ற அந்த பெண் 5 டாலர் மதிப்புள்ள 5 லாட்டரி டிக்கெட்களை வாங்கியுள்ளார். பின்னர் அந்த பெண் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள அரிசோனாவில் இருந்து பாசோ ரோபில் பயணம் மேற்கொண்டிருந்திருக்கிறார். அந்த சமயத்தில் தான் மோமிங்குயிஸ்-க்கு தெரியவந்திருக்கிறது, தான் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பம்பர் பரிசு விழுந்திருக்கிறது என்று. அவருக்கு அந்த லாட்டரியில் $555,555 அமெரிக்க டாலர் பரிசுத் தொகை விழுந்திருக்கிறது.

லாட்டரி பரிசு பெற்ற ரோசா மோமிங்குயிஸ் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்போது, ரொம்ப படபடப்புடன் காணப்பட்டதோடு, அழுகை வருவது போல இருப்பதாக தெரிவித்தார். அவர் அதோடு மட்டுமல்லாமல் அந்த உற்சாகத்தில் அதே வாரத்தில் மற்றொரு லாட்டரி டிக்கெட்டையும் வாங்கியிருக்கிறார். சொன்னால் நம்பமாட்டீர்கள், அதிலும் அவருக்கு அடித்திருக்கிறது ஜாக்பாட். அந்த பம்பர் பரிசில் $100,000 பரிசு விழுந்தது.

இந்த பரிசு தொகையை பெற்றுக்கொள்வதற்காக லாட்டரி அலுவலத்திற்கு ரோசா மோமிங்குயிஸ் சென்றார். அப்போது, அவர் கூறும்போது, லாட்டரியில் பெற்ற பரிசுத் தொகையை வைத்து புதிய கார் ஒன்றை வாங்க திட்டமிட்டதாக தெரிவித்தார்.

பாசோ ரோபில்ஸ்-ல் உள்ள ஈகில் எனர்ஜி பகுதியில் $5 அமெரிக்க டாலர் மதிப்புள்ள 5 லாட்டரி டிக்கெட்ஸை வாங்கியிருக்கிறார் ரோசா மோமிங்குயிஸ். அதேவாரத்தில், கீரின் ஃபீட்டு பகுதியில் $5டாலர் மதிப்பு மற்றொரு லாட்டரி டிக்கெட்டை வாங்கியிருந்தார்.அடுத்தடுத்து அடித்த இரு ஜாக்பாட் பரிசை பார்த்தால், அதிர்ஷ்டமாக இருந்தால் இதுவல்லவா என்று நினைக்கத் தோன்றுகிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment