மரண தருவாயில் ஷாருக்கானை பார்க்க ஆசைப்படும் தீவிர ரசிகை: ஆசையை நிறைவேற்ற களமிறங்கிய நெட்டிசன்கள்

வாழ்வின் இறுதிநிலையில் உள்ள, அருணா என்ற நடுத்தர வயது பெண் ஒருவர், தனக்கு பிடித்த கதாநாயகன் சாருகானை பார்க்க வேண்டும் என்று ஆசை கொண்டிருக்கிறார்.

வாழ்வின் இறுதிநிலையில் உள்ள, அருணா என்ற நடுத்தர வயது பெண் ஒருவர், தனக்கு பிடித்த கதாநாயகன் சாருகானை பார்க்க வேண்டும் என்று ஆசை கொண்டிருக்கிறார்.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
actor shah rukh khan, bollywood, #srkmeetsaruna

சினிமா பிரபலங்கள் மீதான இந்திய ரசிகர்களின் அன்பு மிகவும் அளப்பரியது. அந்த அன்பு இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் சார்ந்தது.

Advertisment

தீராத நோயின் பிடியில் சிக்கி, இறக்கும் தருவாயில் உள்ள எத்தனையோ ரசிகர், ரசிகைகள், தங்களின் விருப்ப கதாநாயகர்கள், கதாநாயகிகளை பார்க்க வேண்டும் என ஆசைப்படும் நிகழ்வுகள் அவ்வப்போது நடக்கும். பெரும்பாலும், விருப்ப கதாநாயகர்களைத்தான் பார்க்க வேண்டும் என அதிகளவில் ஆசைப்படுவார்கள்.

அதேபோல், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வாழ்வின் இறுதிநிலையில் உள்ள, அருணா என்ற நடுத்தர வயது பெண் ஒருவர், தனக்கு பிடித்த கதாநாயகன் சாருகானை பார்க்க வேண்டும் என்று ஆசை கொண்டிருக்கிறார்.

கோடிக்கணக்கிலான ரசிகர்களை கொண்டிருக்கும் சாருகானுக்கு, இந்த ரசிகையின் கடைசி ஆசை தெரியுமா? அதனால், ட்விட்டடில் அப்பெண்ணின் ஆசை குறித்து, பலரும் சாருக்கானுக்கு டேக் செய்து வருகின்றனர். அதன்மூலம், அப்பெண்ணை சாருக்கான் சந்திக்க மாட்டாரா என நெட்டிசன்கள் #SRKMeetsAruna என்ற ஹேஷ் டேக் மூலம் ட்வீட் செய்து அதனை பிரபலப்படுத்தி வருகின்றனர்.

Advertisment
Advertisements

Shah Rukh Khan Bollywood

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: