Advertisment

96 வெற்றிக்கு பிறகு ஜாலியாக இருந்த த்ரிஷாவுக்கு இப்படியொரு கவலையா?

த்ரிஷா காட்டும் காதல் உணர்வு ஊறும் சிறு கண்ணசைவுகள் கூட ரசிகர்களை கவர்ந்து இழுக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
த்ரிஷா

த்ரிஷா

96 படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மிகுந்த சந்தோஷத்தில் இருக்கும் த்ரிஷாவின் வாழ்க்கையில் இப்போது மற்றொரு சோகம் அரங்கேறியுள்ளது.

Advertisment

த்ரிஷா ஹாப்பி:

தமிழ் சினிமாவில் சில படங்களில் மட்டும் வந்து செல்லும் நடிகைகளில் போல் இல்லாமல் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார் நடிகை த்ரிஷா. சாமி படத்தில் அவரை மொளக்கா பொடி மாமியாக ரசித்தவர்கள் சமீபத்தில் வெளியான ஜானுவாக தலையில் வைத்துக் கொண்டாடி வருகிறார்கள்.

publive-image

96 படத்தில் த்ரிஷாவின் அழகு சமூகவலைத்தளங்களில் அதிகம் பேரால் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்த சந்தோஷத்தில் ஜாலியாக இருந்த த்ரிஷாவிற்கு இப்போது மற்றொரு சோதனை அரங்கேறியுள்ளது. ஜானு கதாபாத்திரத்தில், த்ரிஷா காட்டும் காதல் உணர்வு ஊறும் சிறு கண்ணசைவுகள் கூட ரசிகர்களை கவர்ந்து இழுக்கிறது.

ஜானு கதாபாத்திரத்தில் த்ரிஷா அணிந்து வரும் மஞ்சள் நிற குர்த்திக்கு தனியாகவே ரசிகை பட்டாளம் குவிந்து விட்டது. தீபாவளிக்கு ஸ்பெஷல் ஆடையாகவும் கடைகளில் அணிவகுத்திருக்கிறது அந்த மஞ்சள் நிற குர்த்தா.

இந்நிலையில், த்ரிஷாவின் ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், சரியாகும் வரை யாரும் பதிவிடும் கருத்துகளுக்கு ரெஸ்பான்ஸ் செய்யவேண்டாம் எனவும் நடிகை த்ரிஷா கேட்டுக் கொண்டுள்ளார்.

Trisha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment