சமூக அக்கறைன்னா இதுதான்... வீடியோவில் பாடம் நடத்தும் அஜித் ஹீரோயின்
அஜித்துடன் ஹீரோயினாக நடித்த வித்யாபாலன், புடவைத் துணியில் முகக் கவசம் செய்வது எப்படி என்று பாடம் நடத்துவது போல விளக்கி வெளியிட்டுள்ள வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அஜித்துடன் ஹீரோயினாக நடித்த வித்யாபாலன், புடவைத் துணியில் முகக் கவசம் செய்வது எப்படி என்று பாடம் நடத்துவது போல விளக்கி வெளியிட்டுள்ள வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ajith movie heroine vidyabalan, actress vidyabalan, வித்யாபாலன், அஜித் பட நடிகை வித்யாபாலன், முகக் கவசம் செய்வது எப்படி, புடவைத் துணையில் முகக்கவசம் செய்வது எப்படி, வித்யாபாலன் வீடியோ வைரல், vidyabalan, vidyabalan says how to make mask with saree cloth, viral video, வைரல் வீடியோ, how to make mask, coronavirus, lock down, covid-19, vidyabalan viral video
அஜித்துடன் ஹீரோயினாக நடித்த வித்யாபாலன், புடவைத் துணியில் முகக் கவசம் செய்வது எப்படி என்று பாடம் நடத்துவது போல விளக்கி வெளியிட்டுள்ள வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
Advertisment
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே வெளியே வருகின்றனர். அப்படியே வெளியே வருபவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வரவேண்டும் என்று சுகாதாரப் பணியாளர்களும் காவல்துறையினரும் அறிவுறுத்தி வருகின்றனர்.
Advertisment
Advertisements
முகக் கவசம் அணியாமல் வெளியே சுற்றுபவர்களைத் தடுத்து நிறுத்தும் காவல்துறை அவர்களை முகக் கவசம் அணிய அறிவுறுத்துவதோடு அபராதமும் விதித்து வருகின்றனர். மேலும், முகக் கவசம் விலை அதிகம் என்று கிடைக்கவில்லையென்றால், வெளியே வரும்போது, குறைந்த பட்சம், கைக்குட்டை அல்லது ஏதேனும் துணியை முகக்கவசமாக அணிந்து வர வேண்டும் என்று கூறுகின்றனர்.
டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் முகக் கவசம் இல்லாமல் வெளியே சுற்றினால் கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படுகிறது.
சினிமா நட்சத்திரங்களும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த ஊரடங்கை கடைபிடிப்பதுடன் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்றும் வெளியே வரும்போது முகக் கவசம் அணிய வெண்டும், கை கழுவ வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வரிசையில், முகக் கவசம் வாங்க முடியாவிட்டால், மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள புடவை துணி மூலம் முகக் கவசம் செய்து அணிந்து கொண்டு வெளியே வரலாம் என்று அஜித் பட ஹீரோயின் நடிகை வித்யாபாலன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
நடிகை வித்யா பாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில், புடவைத் துணி மூலம் எப்படி முகக் கவசம் தயாரிப்பது என்பதை விளக்கியுள்ளார். புடவைத் துணி, இரண்டு ரப்பர் பேண்ட்களைக் கொண்டு எப்படி முகக் கவசம் தயாரிப்பது என்று நடிகை வித்யா பாலன் மிகவும் எளிமையாகவும் அழகாகவும் விளக்கியுள்ளார். வித்யா பாலன் வெளியிட்ட இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சமூக அக்கறைன்னா இதுதான் என்று என்று பகிர்ந்து வருவதால் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
கோலிவுட், பாலிவுட் என பல மொழி படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ள நடிகை வித்யா பாலன், நடிகர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் ஜோடியாக நடித்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"