கண்ணாமூச்சி ஆட்டத்தில் வாஷிங் மெஷினின் உள்சென்று ஒளிந்தவரை தீயணைப்பு வீரர்கள் மீட்க போராடிய வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது..
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
அமெரிக்காவின் விர்ஜினியா பகுதியை சேர்ந்தவர் அமாரி டான்சி. 18 வயதான இவர் வீட்டில் உறவுக்கார குழந்தைகளுடன் கொரோனா ஊரடங்கு உத்தரவு காலத்தை போக்கிக்கொண்டிருந்தார். இந்நிலையில், அவர்கள் வீட்டினுள்ளேயே, ஒளிந்து விளையாடும் கண்ணாமூச்சி விளையாட்டை விளையாட தீர்மானித்தனர்.
அனைவரும் ஒளிந்துகொள்ள ஒரேமாதிரியான இடங்களை தேர்ந்து செய்ததில், டான்சி மட்டும் விநோதமாக யோசித்தார். தன்னை யாரும் எளிதில் கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதில் டான்சி மிகவும் முனைப்பாக இருந்தார். தன்னுடைய பெரிய உடல் குறித்து கவலைப்படாமல், வீட்டில் இருந்த வாஷிங் மெஷினுக்குள் இறங்கி ஒளிந்து கொண்டார்.
View this post on InstagramA post shared by ɴᴀᴏᴍɪᴇʟɪᴢᴀʙᴇᴛʜ ???? (@mikoa_samigeisha) on
சிறிதுநேரத்தில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் கூச்சல் போட்டதையடுத்து அவரை மீட்கும் பணியில் குடும்பத்தினர் ஈடுபட்டனர். அவர்களது முயற்சி பலனளிக்காததால் டான்சியின் அத்தை, தீயணைப்பு வீரர்களை தொடர்பு கொண்டார்.
சம்பவ இடத்திற்கு வந்த பிரின்ஸ் வில்லியம் மாகாண தீயணைப்பு மற்றும் மீட்புபடை வீரர்கள், வாஷிங் மெஷினின் மேல்பக்க கதவை லாவகமாக கழட்டி, டான்சியை பாதுகாப்பாக மீட்டனர்.
மீட்புப்படையினர் டான்சியை மீ்ட்பதை, அவரது அத்தை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
Fox News செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, குழந்தைகள் விளையாட்டின்போது குழந்தைகளாகவே யோசிக்க வேண்டும். அதனை மீறி யோசித்தால் இதுபோன்ற விளைவுகளையே நாம் சந்திக்க நேரிடும். பள்ளிகள் எப்போது திறக்கும் என்று எதிர்பார்த்து காத்திருப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.