தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி கண்டு வருகிறது. அனைத்தும் டிஜிட்டல் மையமாகி வருகிறது. இன்டர்நெட் உலகமையமாகி விட்டது. அனைத்தும் ஸ்மார்ட்போன், ஆன்லைன் என வந்துவிட்டது. நாள்தோறும் புது புது கண்டுபிடிப்புகள் வெளியிடப்படுகிறது. இந்நிலையில் Artificial Intelligence (AI) எனச் சொல்லப்படுகிற செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி கலைஞர் ஒருவர் விண்வெளி வீராங்கனையை மணப்பெண் தோற்றத்தில் இருப்பது போல் மாற்றியுள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜெயேஷ் சச்தேவ் என்ற கலைஞர் AI பயன்படுத்தி விண்வெளி வீராங்கனை மணப்பெண் ஆக மாறினால் எப்படி இருப்பார் என்று கற்பனையாக ஒரு தோற்றத்தை மாற்றியுள்ளார். ஜெயேஷ் சச்தேவ் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 4 படங்களைப் பகிர்ந்துள்ளார். விண்வெளி வீராங்கனை உடையில் அதாவது ஸ்பேஸ்சூட் அணிந்து அந்தப்பெண் மணப்பெண் போல் நகைகள் தலையில் பூக்கள் வைத்துள்ளார். அவரின் ஸ்பேஸ்சூட்டும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
சில படங்களில், அந்த பெண் அணிந்திருக்கும் ஹெல்மெட்களும் பூக்களால் அழகாக அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றன. படங்களின் பின்புறமும் அவர் விண்வெளியில் இருப்பது போல் Background-யும் பொருத்தமாக சித்தரிக்கப்பட்டுள்ளன.
இந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. கலைஞர் ஜெயேஷ் சச்தேவ்-க்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/