தீபாவளியன்று இந்தியா இப்படித்தான் இருந்தது: அட! இந்த புகைப்படம் உண்மைதாங்க

பாவ்லோ நெசபோலி என்ற விஞ்ஞானி, அந்த புகைப்படத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். இந்த புகைப்படத்தை பகிர்ந்ததற்காக, இந்தியர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

பாவ்லோ நெசபோலி என்ற விஞ்ஞானி, அந்த புகைப்படத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். இந்த புகைப்படத்தை பகிர்ந்ததற்காக, இந்தியர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
diwali festival, india during diwali, diwali 2017

தீபாவளி பண்டிகை சமீபத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பட்டாசுகளின் காரணமாக காற்று மாசுபாடும் அதிகரித்துள்ளது. இதில், தீபாவளி பண்டிகைக்கு பின் காற்று மாசுபாடு அதிகரிப்பில் ராஜஸ்தான் மாநிலம் பிவாடி பகுதி முதலிடத்தை பிடித்தது. சென்னை 9-வது இடத்தில் உள்ளது. பட்டாசுகள் விற்க உச்சநீதிமன்றம் தடை விதித்தும், டெல்லி நகரம் காற்று மாசுபாட்டில் 4-வது இடத்தை பிடித்துள்ளது.

Advertisment

தீபாவளி பண்டிகை முடிந்தது, காற்று மாசுபாடு அளவு குறித்து தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவோம். அதற்கடுத்து நாம் ஆர்வம் காட்டும் விஷயம், அன்றைய தினம் இந்தியா எப்படி இருந்தது என தெரிந்துகொள்ள. ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின்போதும், அன்றைய தினம் இந்தியா எப்படி இருந்தது என சமூக வலைத்தளங்களில் பல புகைப்படங்கள் வைரலாகும். இந்தாண்டும், அப்படி நிறைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் உலா வந்தன.

இந்நிலையில், கடந்த தீபாவளி பண்டிகையின்போது இந்தியா எப்படி இருந்தது என்ற உண்மையான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாவ்லோ நெசபோலி என்ற விஞ்ஞானி, அந்த புகைப்படத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். இந்த புகைப்படத்தை பகிர்ந்ததற்காக, பலரும் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Advertisment
Advertisements

முன்னதாக, தீபாவளி அன்று நாசா விஞ்ஞானிகளால் எடுக்கப்பட்ட புகைப்படம் என சமூக வலைத்தளங்களில் வைரலான புகைப்படம் இது. இந்த புகைப்படம் போலியானது என அறிவிக்கப்பட்டும், இன்றும் வைரலாகி வருகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: