விமானத்தில் பிறந்த குழந்தைக்கு கிஃப்ட்!

கிறிஷ்டிணா பென்டன் என்னும் கர்ப்பிணிப் பெண் ஒருவர் அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள
ஃபோர்ட் லாடெர்டேல் விமான நிலையத்தில் இருந்து டேக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள டால்லஸ்-க்கு கடந்த வாரம் பயணம் மேற்கொண்டார். பயணம் செய்யும் போது கிறிஷ்டிணா பென்டனுக்கு அசௌர்கயமாக இருந்துள்ளார். விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

தனக்கு ஏற்பட்டுள்ள பிரசவ வலி குறித்து கிறிஷ்டிணா பென்டன், விமான பணிப்பெண்களிடம் விவரித்திருக்கிறார். விமானத்தில் இருந்த குழுவினரும் விரைந்து வந்து கிறிஷ்டிணா பென்டனுக்கு தேவையான அனைத்து உதவியும் செய்தனர்.

ஆனால், கிறிஷ்டிணா பென்டனுக்கு அதிர்ஷ்டமோ என்னமோ தெரியவில்லை, அவர் பயணம் செய்த விமானத்திலேயே குழந்தைகள் நல மருத்துவரும், கூடவே ஒரு நர்ஸும் பயணம் செய்திருக்கின்றனர். இதையடுத்து மருத்துவரின் உதவியுடன் பறக்கும் விமானத்திலேயே கிறிஷ்டிணா பென்டன் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இதன்காரணமாக, நியூ ஆர்லியன்ஸ் விமான நிலையித்தில் விமானம் அவசரமாக தலையிரக்கப்பட்டது.

இதையடுத்து, ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனமானது, தங்கள் நிறுவன விமானத்தில் பிறந்த அந்த குழந்தைக்கு, பரிசளிக்கும் விதமாக, வாழ்நாள் முழுவதும் இலவச விமான பயணம் மேற்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

விமானத்தில் நடந்த இந்த சம்பவத்தை சக பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்திருக்கிறார்.

×Close
×Close