இதனால் தான் ஒபாமாவை எல்லோருக்கும் இப்படி பிடிக்குது!

என்னை சாண்டாவாக ஏற்றுக்கொண்டதற்கு நன்றி

கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதியான பராக் ஒபாமா குழந்தைகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இன்ப அதிர்ச்சி கொடுத்த ஒபாமா:

களத்தில் இல்லையென்றாலும் அதிகப்படியான அமெரிக்க மக்களால் விரும்பப்படும் தலைவர்களில் பராக் ஒபாமாவும் ஒருவர்.  சொல்லப்போனால் அமெரிக்கர்களுக்கு மட்டுமில்லை இந்தியர்களுக்கும் ஒபாமா என்றால் தனி அன்பு தான்.

அதற்கு காரணம் ஒபமாவின் இதுப்போன்ற செயல்கள் தான். டிசம்பர் மாதம் என்றாலே கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைக்கட்ட தொடங்கி விடும். குறிப்பாக வெளிநாடுகளில் 1 மாதத்திற்கு முன்பே  கிற்ஸ்துமஸ் கொண்டாட்டம்  கோலாகலமாக தொடங்கிவிடும். குழந்தைகளை மகிழ்விக்க சாண்டா கிலாஸ் வருவார்.

அப்படித்தான் நேற்று இரவு, வாஷிங்டனில்  உள்ள  குழந்தைகள் நல மருத்துவமனைக்கு  அனைவரின் மனம் கவர்ந்த ஒரு சாண்டா கிலாஸ் வந்திருந்தார்.அவர் சாண்டா கிலாஸ் போல் ஆடையெல்லாம் அணியவில்லை. சாண்டா தொப்பி மட்டுமே போட்டிருந்தார். ஆனால் கையில் நிறைய பரிசுப் பொருட்களை கொண்டு வந்திருந்தார்.

அவரை பார்த்த குழந்தைகள் மகிழ்ச்சியில் கத்தினர்.  அவர் தான் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா. குழந்தைகளுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்க ஒபாமா சாண்டா கிலாஸாக திடீர் விசிட் அடித்தார். அவரின் வரவு அங்கிருந்தவர்களுக்குப் பெருமகிழ்ச்சி கொடுத்தது.

மருத்துவமனையின் ஒவ்வோர் அறையிலும் நுழைந்து சிகிச்சையில் இருக்கும் குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகளை அவர் வழங்கினார். குழந்தைகள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். சில குழந்தைகள் சந்தோஷத்தில் அழவும் செய்தனர். ஒவ்வொரு குழந்தையையும் கட்டியணைத்து முத்தமிட்டு தன் வாழ்த்தை தெரிவித்தார்.

இதை பார்த்த மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள், நர்ஸ் ஆகியோர் கண்கலங்கி நின்றனர். அவர்களுக்கும் கிஃப்ட் கொடுத்து ஒபாமா அனைவரையும் சிரிக்க வைத்தார். பின்பு அவர்கள் மத்தியில் உரையாற்றிய ஒபாமா “உங்களின் சேவை புனிதமானது. பண்டிகை காலங்களிலும் உங்கள் குடும்பத்துடன் செலவிடாமல் மருத்துவமனையில் இருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி” என கூறினார்.

ஒபாமா கிறிஸ்துமஸ் தாத்தாவாக வலம் வரும் வீடியோவை தேசிய குழந்தைகள் மருத்துவமனை தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளனர்.அந்த ட்வீட்டை ரீட்வீட் செய்த ஒபாமா `உங்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். என்னை சாண்டாவாக ஏற்றுக்கொண்டதற்கு நன்றி’ என்று குறிப்பிட்டார்.

இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் பலரும் இதனால் தான் ஒபாமாவை எல்லோருக்கும் பிடிக்கிறது. சேட்டைகளின் சொந்தக் காரர் அவர், என தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Viral News by following us on Twitter and Facebook

×Close
×Close