அஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ

இந்த வீடியோவில் அஞ்சாமல் சாலையைக் கடந்து செல்கிற கருஞ்சிறுத்தையைப் பாருங்கள். உங்கள் மனதில் ஜங்கிள் புக் பகீரா வந்து நிற்பதை உணர முடியும்.

By: October 25, 2020, 8:59:17 AM

மனித இனம் காணாத பல நிகழ்வுகள் காடுகளில் இன்னும் ரகசியங்களாக இருந்து வருகிறது. மனிதன் என்னதான் நவீனமடைந்துவிட்டதாகக் கூறிக்கொண்டாலும் இயற்கையின் அந்த ரகசியங்களைக் காணவும் இயற்கையின் பேரழகைக் கண்டு தரிசிப்பதற்காகவும்தான் இன்னும் காடுகளில் பயணம் செய்துகொண்டிருக்கிறான்.

காடுகளில் பல உயிரினங்கள் வாழ்ந்தாலும் காட்டைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்துபவை வேட்டை விலங்குகள். சிங்கம், புலி, சிறுத்தை, கரடி போன்ற விலங்குகள் காடுகளில் மனிதர்களுக்கு அச்சம் தரக் கூடியவையாக இருக்கிறது.

வேகத்திற்கு பெயர் பெற்ற சிறுத்தைகள், சிறுத்தை, சிறுத்தைப் புலி, கருஞ்சிறுத்தை என்றும் பிரதேசங்கள் சார்ந்து சிறுத்தைகளில் பல வகைகள் உள்ளன. அவற்றில் உடல் முழுவதும் கருப்பாக ஒளிரும் கண்களுடன் காணப்படும் கருஞ்சிறுத்தை அச்சமூட்டக்கூடியதாகவும் வசீகரமானவையாகவும் இருக்கிறது.

அப்படி அச்சம் தரக்கூடிய வசீகரமான கருஞ்சிறுத்தை ஒன்று வாகனங்களைக் கண்டும் அஞ்சாமல் சாலையைக் கடந்து செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ வனத்துறையினர் காடுகளில் ரோந்து செலும்போது பதிவு செய்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது. காட்டில் கருஞ்சிறுத்தை ஒன்று சாலையைக் கடந்து செல்லும் வீடியோவை வனத்துறை அதிகாரி, பிரவீன் கஸ்வான் ஐ.எஃப்.எஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ குறித்து பிரவீன் கஸ்வான் குறிப்பிடுகையில், “இது இந்தியாவின் கருஞ்சிறுத்தை. இந்த வீடியோ எங்கே எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை. வனத்துறை பணியாளர்கள் மூலம் பகிரப்பட்டது. இந்தியாவில் பல மாநிலங்களில் கருஞ்சிறுத்தைகள் காணப்படுகிறது. இது இன ரீதியாக பொதுவாக சிறுத்தைக் குடும்பத்தைச் சேர்ந்தது.

இந்த கருஞ்சிறுத்தைகளை அடிப்படையாக வைத்துதான் ‘தி ஜங்கிள் புக்’ திரைப்படத்தில் மோக்ளியின் பகீரா கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

இப்போது, வாசகர்கள், தி ஜங்கிள் புக் கதாபாத்திரத்தில் வருகிற கருஞ்சிறுத்தை பகீரா-வை மனதில் வைத்துக்கொண்டு இந்த வீடியோவில் அஞ்சாமல் சாலையைக் கடந்து செல்கிற கருஞ்சிறுத்தையைப் பாருங்கள். உங்கள் மனதில் ஜங்கிள் புக் பகீரா வந்து நிற்பதை உணர முடியும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Black panther of india crossed road viral video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X