இயற்கை எப்போதும் அழகானதும், ஆச்சரியங்கள் நிறைந்ததாகவும் இருக்கும். இயற்கையை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்தவகையில் கலிபோர்னியாவில் இயற்கையை ரசிக்க சுற்றுலா பயணிகள் படகில் கடலில் சென்றபோது நிறைமாத திமிங்கலம் ஒன்று குட்டியை ஈன்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கலிபோர்னியாவில் உள்ள டனா பாயிண்ட் என்ற பகுதியில் 30 அடிக்கும் நீளமான சாம்பல் நிற திமிங்கலங்கள் அங்கு வசித்து வருகின்றன. அங்கு சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்த போது திமிங்கலம் குட்டியை ஈன்றுள்ளது.
கேப்டன் டேவின் டானா பாயிண்ட் டால்பின் & திமிங்கிலம் என்ற யூடியூப் பக்கத்தில் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், இவர்கள் பயணம் செய்த படகு கடலில் சென்று கொண்டிருக்கிறது. திடீரென அங்கு வந்த தாய் திமிங்கலம் குழந்தையை பெற்றெடுக்கிறது. பின் அதை தாய் திமிங்கலம் தன் முதுகில் ஏற்றி அரவணைத்து விளையாடுகிறது. இதை பார்த்த சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/