திக் திக் திக் வீடியோ : 130 அடி உயரமுள்ள ராட்சத ராட்டினத்தில் சிக்கிக் கொண்ட சிறுவன்!

மகனை  தனியாக ஏற்றி விட்டு  அவன் பயப்படுவதை  செல்போனில் வீடியோ எடுக்க ஆசைப்பட்டுள்ளார்

சீனாவில் தாயின் வீபரீத ஆசையால், அவரது 5 வயது மகன் 130 அடி உயரமுள்ள ராட்சத ராட்டினத்தில் தொங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராட்சத ராட்டினம்:

சீனாவல் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள தீம் பார்க்கில்  சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அடிக்கடி சென்று வருவது வழக்கம்.  இந்த பூங்காவில் கடந்த 24 ஆம் தேதி பெண் ஒருவர் தனது 5 வயது மகனை அழைத்து சென்றிருந்தார்.

அப்போது பூங்காவில் சுற்றிக் கொண்டிருந்த ராட்சத ராட்டினத்தில் தனது மகனை  தனியாக ஏற்றி விட்டு  அவன் பயப்படுவதை  செல்போனில் வீடியோ எடுக்க ஆசைப்பட்டுள்ளார். தனது ஆசையை அங்குள்ள பணியாளர்களிடம்  தெரிவித்துள்ளார்.

இதற்கு பணியாளர்கள் முதலில் மறுப்பு தெரிவித்தனர். பின்னர் அவர்களுக்கு 30 யுவான் (ரூ. 316) கொடுத்து தனியாக அந்த சிறுவனை ராட்டினத்தில் ஏற்றியுள்ளார். ராட்டினம் சுற்ற ஆரம்பித்ததும் பயந்த சிறுவன் அதன் கதவை திறந்து வெளியே வர முயற்சித்தான்.

அப்போது நிலை தடுமாறி கீழே விழும் நிலைக்கு சிறுவன் சென்றதை பார்ப்பவர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக அவனது கால்களும் கழுத்தும் ராட்டின கம்பிகளை பிடித்துக் கொண்டதால் 132 அடி உயர ராட்டினத்தின் அந்தரத்தில் சிறுவன் தொங்கும் நிலை ஏற்பட்டது.

அதன் பின்பு உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர் சிறுவனை பத்திரமாக காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தன. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close