குழந்தைக்கு பாலூட்டிய பெண்ணிடம் மார்பகங்களை மூட அறிவுறுத்திய மியூசியம்: பதிலடி அளித்த பெண்

தனது குழந்தைக்கு பாலூட்டிய பெண்ணிடம் மார்பகங்களை மூடுமாறு அருங்காட்சியக பணியாளர் ஒருவர் கூறியதையடுத்து, அதற்கு அப்பெண் ட்விட்டரில் தகுந்த பதிலடி அளித்தார்.

ஒரு பெண் பொது இடத்தில் தன் குழந்தைக்கு பாலூட்டினால் அதனை முகசுளிப்புடன் கடந்து செல்வோர் பெரும்பாலானோர் உண்டு. அதனை ஒரு நிகழ்வாக கடந்து செல்லாமல், அதனை கவர்ச்சி, ஆபாசம் என ஒப்பிட்டு கூப்பாடு செய்வோரும் உண்டு. இதுகுறித்து, எவ்வளவோ விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டாலும், பொது இடத்தில் பாலூட்டும் பெண்களிடம், மார்பகங்களை மூடுமாறு சமூகம் அறிவுறுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.

லண்டனில் அருங்காட்சியகத்தில் தனது குழந்தைக்கு பாலூட்டிய பெண்ணிடம் மார்பகங்களை மூடுமாறு அருங்காடியக பணியாளர் ஒருவர் கூறியதையடுத்து, அதற்கு அப்பெண் ட்விட்டரில் தகுந்த பதிலடி அளித்தார். அந்த அருங்காட்சியகத்தில் நிர்வாகத்துடன் காட்சியளிக்கும் சிலைகளை பதிவிட்டு, அவற்றின் மார்பகங்களையெல்லாம் மூட முடியுமா என நக்கலாக கேள்வி எழுப்பியுள்ளார்.

லண்டன் விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில், பெண் ஒருவர் தனது ஒரு வயது மகனுக்கு பாலூட்டினார். அப்போது அங்கிருந்த அருங்காட்சியக பணியாளர் ஒருவர், அப்பெண்ணிடம் மார்பகங்களை மூடுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து அப்பெண் ட்விட்டரில் இதற்கு தக்க பதிலடி அளித்தார்.

விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில், பாலூட்டும்போது மார்பகங்களை மூடுமாறு அறிவுறுத்தியபோது நான் குழப்பமடைந்தேன்.

மேடம், நீங்கள் பாலூட்டும்போது இந்த முகமூடி கொண்டு நான் உங்கள் மார்பகங்களை மூடினால் நீங்கள் ஏதாவது நினைத்துக் கொள்வீர்களா?

“இந்த வெற்று மார்பகங்களுடன் உங்களை வெளியே எறிந்துவிடுவேன்.”

இவர் தன் பதிவுகளில், அந்த அருங்காட்சியகத்தின் பக்கத்தை டேக் செய்தார். அவருடைய பதிவுகளை 14,000 பேர் விரும்பினர், 7,000-க்கும் மேற்பட்டோர் ரீட்வீட் செய்தனர். இதையடுத்து, அருங்காட்சியக நிர்வாகம் தனது செயலுக்கு மன்னிப்பு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டது. அதில், “நடந்த செயலுக்காக மன்னிப்பு கோருகிறோம். இந்த அருங்காட்சியகத்தில் பெண்கள் பாலூட்டலாம். தனிமையை விரும்புவோர் பாலூட்டுவதற்காக தனி அறையும் உள்ளது.”, என பதிவிடப்பட்டிருந்தது.

×Close
×Close