திருமணம் குறித்து பேசச்சென்ற இடத்தில் மோடி குறித்து பேச்சு.... காரசார விவாதத்தால் கல்யாணம் நின்றது!

திருமணம் செய்யவிருந்த அந்த ஜோடிகள் குறித்த அதிக தகவல் இல்லை. எனினும், நேரந்திரமோடி குறித்து பேசியதனால் பிரிந்துவிட்டனர் என தகவல் வெளியாகியுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி குறித்து மாறுபட்ட கருத்து ஏற்பட்டதால், திருமணத்தை ரத்து செய்துள்ளனர் இந்த ஜோடி.

இளம் தலைமுறையினர் அரசியல் குறித்து அறிந்து கொள்வதில் தற்போது அதிக ஈடுபாடு கொண்டுள்ளனர் என்றே கூறலாம். சமூக வலைதளங்களில் அரசியல் குறித்து நடக்கும் விவாதங்களுக்கு பஞ்சம் இல்லை. எந்த பிரச்சனைகள் குறித்தும் விவாதம் செய்வதற்கும் தகுந்த இடமாக சமூக வலைதளம் விளங்குகிறது. சமூக வலைதளங்களில் நிரம்பியுள்ள இளம்தலைமுறையினர், ஆளுக்காளுக்கு ஒரு கருத்துடன் எளிதாக விவாதம் செய்துவிட முடியும் என்பது தான் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

ஆனால், நரேந்திர மோடியின் மீது வைத்த கருத்து ஒரு திருமணத்தையே தடுத்து நிறுத்தி விட்ட சம்பவம் உத்திர பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. திருமணம் செய்யவிருந்த அந்த ஜோடிகள் குறித்த அதிக தகவல் இல்லை. எனினும், நேரந்திரமோடி குறித்து பேசியதனால் பிரிந்துவிட்டனர் என தகவல் வெளியாகியுள்ளன.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பிஸினஸ்மேன் ஒருவர், அரசு வேலை செய்யும் பெண் ஒருவரை திருமணம் செய்யவிருந்தார். நிச்சயதார்த்தம் முடிவடிந்த நிலையில், திருமணம் நடைபெறுவது குறித்து பேசுவதற்காக இருவரும் அங்குள்ள கோயிலுக்கு சென்று பேசியுள்ளனர்.

எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டிருந்த நிலையில், அவர்களில் ஒருவர் நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையில் இருப்பது குறித்த டாப்பிக்கை எடுத்துவிட்டிருக்கிறார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடிதான், நாட்டின் மந்தநிலைக்கு காரணம் என பெண் கூறியதாக தெரிகிறது. ஆனால், மாப்பிள்ளையோ நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளராம், பெண்ணின் கருத்தை ஏற்க மறுத்த மாப்பிள்ளை, தீவிர விவாதம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் அவர்கள் இருவருக்குள்ளே இந்த விவாதம் சூடுபிடிக்க, திருமணத்தை நிறுத்தவே முடிவு செய்துவிட்டார்களாம்.

இது தொடர்பாக வெளிப்படையாக முடிவு எடுத்த அவர்கள் தங்களது குடும்பத்தாரிடம் சென்று, இந்த திருமணம் நிறுத்தச் சொல்லியுள்ளனர். நரேந்திர மோடிக்காக எழுந்த விவாதத்தில் திருமணமே நின்றுபோனதைக் கண்டு வியப்பில் ஆழ்ந்துள்ளனர் அவர்களது குடும்பத்தினர்.

×Close
×Close