viral video: செங்குத்தான மலையில் ஒரு பனிச் சிறுத்தை மின்னல் வேகத்தில் காட்டு ஆட்டை வேட்டையாடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வாழ்வா சாவா போராட்டத்தில் பனிச் சிறுத்தையின் சிலிர்க்க வைக்கும் வேட்டையை பலரும் சிலாகித்து வருகின்றனர்.
லடாக் மலைப்பகுதியில் பனிச்சிறுத்தை வேட்டையாடுகிற வீடியோ பார்வையாளர்களை சிலிர்க்க வைத்து இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்துள்ளார். “என்ன ஒரு புத்திசாலித்தனமான வேட்டைப் பனிச் சிறுத்தை’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவில், செங்குத்தான மலையில் இருக்கும் பனிச் சிறுத்தை ஒன்று மேய்ந்துகொண்டிருக்கும் ஆடுகளைப் பார்க்கிறது. அந்த பனிச் சிறுத்தை ஆடுகளை வேட்டையாட குறி வைக்கும்போதே ஆடுகள் உயிருக்கு பயந்து வாழ்வா சாவா என்று தப்பி ஓடுகின்றன. ஆனால், இந்த பனிச் சிறுத்தை செங்குத்தான மலைச் சரிவில் மின்னல் வேகத்தில் பாய்ந்து ஆடுகளைத் துறத்துகிறது. அப்போது ஒரு காட்டு ஆடு வேட்டையாடுகிறது. கான்கிரீட் பாதையில் விழுகிறது. மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்த பனிச்சிறுத்தை அந்த காட்டு ஆட்டின் கழுத்தைப் பிடித்து வேட்டையாடுகிறது.
இந்த வீடியோவை வனவிலங்கு புகைப்படக் கலைஞர் வேதாந்த் திட் படம் பிடித்துள்ளார். ட்விட்டர் பயனர் கோஸ்துப் ஷர்மா, வீடியொவைப் பகிர்ந்து, “அதிக செங்குத்தான மலைகளில் நாங்கள் இரையை வீழ்த்துவது இப்படித்தான்… கீழே உலா வருவது மளிகைப் பொருட்களை எடுப்பதற்கு மட்டுமே. எடித் பார்ஷி, @VedantThite உடன் இணைந்து ஒரு அரிய இயற்கை வரலாற்று தருணத்தை கேமராவில் படம்பிடித்து, பனிச்சிறுத்தை லடாக்கில் காட்டு ஆடுகளை வேட்டையாடுவதை பதிவு செய்துள்ளார்” என்றுகுறிபிட்டுள்ளார்.
மற்றொரு பயனர், “உண்மையில் ஒரு அற்புதமான இயற்கை, லடாக்கில் இருந்து வேட்டையாடுவதற்காக துரத்திச் செல்லும் பனிச்சிறுத்தையின் @vedantthite ji இன் நம்பமுடியாத காட்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ குறித்து ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுதா ராமென் குறிப்பிடுகையில், “வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான தருணம்.. இமயமலையின் உயரமான மலைத்தொடரில் பதிவு செய்யப்பட்ட பனிச்சிறுத்தையின் தந்திரமான வேட்டை” என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில், ஹிமாச்சல பிரதேசத்தில் இரண்டு பனிச்சிறுத்தை குட்டிகள் தாயின் அழைப்பை உணர்ந்து மீண்டும் ஒன்று சேர்வதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. அந்த வீடியோவில், பெரிய சிறுத்தை ஒரு பாறையின் அடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதைக் கண்ட சிறுத்தைக் குட்டிகள் உற்சாகமாக தாயை நோக்கிச் சென்றன. தனது குட்டிகள் அருகில் வந்ததும் தாய்ச் சிறுத்தை முகர்ந்து பார்த்து பாசமாக நாவால் நக்கி அன்பை வெளிப்படுத்தியதைக் காண முடிந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“