scorecardresearch

பட்ஜெட் 2023: பழைய vs புதிய வருமான வரி நெட்டிசன்கள் மீம்ஸ்; சிகரெட் மீதான வரி அதிகரிப்பு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட் குறித்து சமூக ஊடகங்களில் #Budget2023, #middleclass, #notax, #80C #cigarette போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங் ஆனது.

budget 2023, new tax regime, பட்ஜெட் 2023, வருமான வரி சலுகை, பட்ஜெட் மீம்ஸ், சிகரெடுக்கு வரி அதிகரிப்பு, பட்ஜெட் மீம்ஸ் வைரல், old tax regime, old tax regime vs new tax regime, new tax regime reactions, budget 2023 reactions

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட் குறித்து சமூக ஊடகங்களில் #Budget2023, #middleclass, #notax, #80C #cigarette போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங் ஆனது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் அறிமுக உரையை முடித்தவுடன், ட்விட்டரில் மீம்ஸ்கள் தெறிக்க ஆரம்பித்தன. வரி தள்ளுபடி, சுங்க வரி, மற்றும் வரிச் சலுகைகள் போன்ற கலவையான தலைப்புகளில் நெட்டிசன்கள் எளிமையான மீம்ஸ்களைப் பதிவிட்டு ட்ரெண்டிங் செய்தனர்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, சமூக #Budget2023 உடன், #middleclass, #notax, #80C மற்றும் #cigarette போன்ற பிற ஹேஷ்டேக்குகளும் ட்ரெண்டிங்கில் இருந்தன. இந்த ஆண்டு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் அறிமுக உரையின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று, புதிய வரி விதிப்பின் கீழ் புதிய வருமான வரி அடுக்குகளுடன் சேர்த்து, வருமான வரி தள்ளுபடி வரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டது.

சிகரெட் மீதான வரி 16 சதவீதமாக உயர்த்தப்பட்டது குறித்து ட்விட்டரில் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். பலர் இந்த நடவடிக்கையைப் பாராட்டினாலும், மற்றவர்கள் (புகைப்பிடிப்பவர்கள்) மீம்ஸ் மூலம் தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர். பான் மசாலா, சிகரெட் மற்றும் மெல்லக்கூடிய புகையிலை பொருட்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு தேசிய பேரிடர் தொகுப்பு வரியின் கீழ் அரசாங்கம் வரி விதிக்கிறது.

நெட்டிசன்கள் நிதி மற்றும் பொருளாதாரம் பற்றிய தங்கள் அறியாமை குறித்தும் கேலி செய்து மீம்ஸ் போட்டுள்ளனர். சிலருக்கு பொருளாதாரம் குறித்து குறைந்த அளவே அறிவு இருந்தாலும் பொருளாதார நிபுணர்களைப் போல காட்டிக் கொள்பவர்களை நெட்டிசன்கள் கேலி செய்தனர்.

நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை ‘அமிர்த காலின் முதல் பட்ஜெட்’ என்று அறிமுகப்படுத்தினார். இந்த பட்ஜெட் ஏழு முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்துகிறது (அம்ரித் கால் மூலம் நம்மை வழிநடத்தும் சப்த்ரிஷிகள்), அவை உள்ளடக்கிய மேம்பாடு, கடைசி இலக்கு எல்லையை எட்டுவது, உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு, ஆற்றல், பசுமை வளர்ச்சி, இளைஞர் சக்தி மற்றும் நிதித் துறையை கட்டவிழ்த்து விடுகின்றன.

பட்ஜெட் குறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த மீம்ஸ்களை இங்கெ தொகுத்து தருகிறோம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Budget 2023 netizens react memes increased tax on cigarettes

Best of Express