இந்த போட்டோவுல எந்த இடத்துல பாம்பு இருக்குது? கண்டுபிடிக்குறது கொஞ்சம் கஷ்டம் தான்!

நல்லா ஜூம் செஞ்சு பார்க்கும் போது கூட அந்த பாம்புங்க இருக்குறது, அவ்வளவு தெளிவா தெரியல. கண்டுபிடிக்குறது கொஞ்சம் கஷ்டம் தான்!

இணையதளத்தில் சவால் விட்டா, அந்த சவால முறியடிக்கதுக்கு எல்லோத்துக்கும் ஆர்வம் இருக்கத்தான செய்யும். பல்வேறு விதமான சவால்கள் இணையதளத்தில் கொட்டிக் கிடக்குது.

அப்படி இருக்குறதுல இது ஒரு சின்ன சவால் தான். ஆமா, இந்த போட்டோவுல பாம்பு மறைஞ்சு இருக்குது. அது அந்த எந்த இடத்துல இருக்குதுன்னு கண்டுபிடிக்குறது தான் அந்த சவால். நீங்க எதுக்கும் கொஞ்சம் டிரை பண்ணி பாருங்க, அந்த பாம்பு எங்க இருக்குன்னு கண்டுபிடிக்குறதுக்கு.

இதோ அந்த போட்டோ. நல்லா பாருங்க, எங்க இருக்குது?

சரிவிடுங்க, அத கண்டு பிடிக்க முடியன்னா இந்த போட்டோவுல பாத்து தெரிஞ்சுக்கோங்க. இந்த போட்டோல ரெண்டு பாம்புங்க இருக்குது. அவைங்க எங்க இருக்குதுன்னு வட்டமிட்டு காமிச்சுருக்காங்க.

நல்லா ஜூம் செஞ்சு பார்க்கும் போது கூட அந்த பாம்புங்க இருக்குறது, அவ்வளவு தெளிவா தெரியல.

Sunshine Coast Snake Catchers 24/7 என்ற பேஸ்புக் பக்கம் இந்த போட்டோஸை வெளியிட்டது. முதலில் பார்க்கும் போதே, பாம்பு எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சவங்க, கமென்ட்ஸ் மூலமா அதை மத்தவங்களுக்கு தெரியப்படுத்தலாமே

×Close
×Close