scorecardresearch

Viral Video : ஃப்ளைட்ல போன இந்த விசயத்தை கனடா மக்களை போல ஃபாலோ பண்ணுங்க!

கனடா மக்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள இன்னும் என்னவெல்லாம் இருக்கின்றதோ என்று கேள்வியே எழுப்புகின்றார்கள் நெட்டிசன்கள்…

Canadian flight passengers deboarding aircraft
Canadian flight passengers deboarding aircraft

Canadian flight passengers deboarding aircraft Viral Video : பொதுவாகவே இன்றைய காலத்தில் எல்லாத்திலும் நமக்கு அவசரம் தான். பேருந்தில் ஏறுவது துவங்கி, ஆட்டோவில் இருந்து இறங்குவது வரை. சுற்றுலா செல்லுகையில், திரையரங்குகளில் இருந்து வெளியேறுகையில் நமக்கு இருக்கும் அவசரம் இருக்கின்றதே. சில நிமிடங்கள் நமக்கு பொறுமை காப்பது என்றால் அதற்கு என்ன அர்த்தம் என்று தான் கேட்போம்.

விமான பயணத்தின் போது நமது பொறுமை முற்றிலுமாக காணாமலே போய்விடும். அனைவரும் அவசர அவசரமாக ஓவர்ஹெட் பின்னில் இருந்து அவர்களின் உடமைகளை எடுத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு வெளியே வந்து மூச்சுவிடுதற்குள் அய்யோ என்று ஆகிவிடும். ஆனால் சமீபமாக கனடாவின் வெஸ்ட்ஜெட் ஃப்ளைட்டில் (Westjet flight) இருந்து வெளியேறிய பயணிகள் உலகத்தில் இருக்கும் அனைத்து அவசர வாழ்க்கை வாழ்பவர்களையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளனர்.

மேலும் படிக்க : வைரல் வீடியோ: கண், வாய், முகம் என அச்சு அசலாய் மனிதனைப் போன்ற சிலந்தி!

Canadian flight passengers deboarding aircraft

கனடாவின் கால்காரியில் இருந்து வடக்கு அல்பெர்ட்டாவில் இருக்கும் ஃபோர்ட் மெக்காய் என்ற இடத்திற்கு வெஸ்ட் ஃப்ளைட்டில் (Westjet flight) பயணித்த பயணிகள், தங்களின் முன்னிருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் தங்களின் உடமைகளை எடுத்துக் கொண்டு வெளியேறும் வரையில் பொறுமை காத்திருந்து பிறகு தங்களின் உடமைகளை எடுத்துக் கொண்டு வெளியேறுகின்றனர்.

24 நொடிகள் கொண்ட அந்த வீடியோவை, ட்ரோண்ட்டோவை சேர்ந்த டாம் போடோலெக் என்ற பத்திரிக்கையாளர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்ய, இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. கனடா மக்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள இன்னும் என்னவெல்லாம் இருக்கின்றதோ என்று கேள்வியே எழுப்புகின்றார்கள் நெட்டிசன்கள்…

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Canadian flight passengers deboarding aircraft viral video